ETV Bharat / city

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? - எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள்

சென்னை: பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் 29ஆம் தேதி வெளியிடப்படும் என தேர்வுத்துறை இயக்ககம் அறிவித்துள்ளது.

sslc
author img

By

Published : Apr 26, 2019, 1:00 PM IST

தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் ஏப்ரல் 19ஆம் தேதி வெளியானது. இதனையடுத்து பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

மொத்தம் ஒன்பது லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதியுள்ளனர். விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் ஏப்ரல் 1ஆம் தேதி தொடங்கி 16ஆம் தேதியுடன் முடிவடைந்தது.

இந்நிலையில், பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் ஏப்ரல் 29ஆம் தேதி காலை 9.30 மணிக்கு வெளியிடப்படும் என தேர்வுத்துறை இயக்ககம் அறிவித்துள்ளது.

  • http://tnresults.nic.in,
  • www.dge1.tn.nic.in,
  • www.dge2.tn.nic.in

ஆகிய இணைய முகவரிகளில் தேர்வு எண், பிறந்த நாள் ஆகியவற்றைப் பதிவுசெய்து மதிப்பெண்களை தெரிந்துகொள்ளலாம். மேலும், தாங்கள் பதிவுசெய்த கைப்பேசி எண் மூலம் தேர்வு முடிவுகளை குறுஞ்செய்தியாகவும் பெற்றுக்கொள்ளலாம்.

மேலும், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை மே 2ஆம் தேதி முதல் பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளியின் தலைமை ஆசிரியர் மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய மையத்தின் தலைமையாசிரியர் மூலமாகவும் பெற்றுக் கொள்ளலாம்.

மே 6ஆம் தேதி முதல் பள்ளி மாணவர்களும் தனித்தேர்வர்களும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை தங்களின் பிறந்த தேதி மற்றும் பதிவு எண் ஆகிய விவரங்களை அளித்து www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் இருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தேர்வுத் துறை இயக்ககம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Intro:பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள்
29 ஆம் தேதி காலை 9.30 மணிக்கு வெளியீடு

Body:சென்னை, பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதிய மாணவர்களின் தேர்வு முடிவுகள் 29 ஆம் தேதி காலை 9.30 மணிக்கு இணையதளத்தில் வெளியிடப்படும் என அரசு தேர்வுத் துறை இயக்குனர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மார்ச் 14-ஆம் தேதி முதல் 29ம் தேதி வரை நடைபெற்றது. இவர்களுக்கான தேர்வு முடிவுகள் 29-ஆம் தேதி காலை ஒன்பது முப்பது மணிக்கு இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.
தேர்வர்கள் தங்களது பதிவு எண் மற்றும் பிறந்த தேதி மாதம் வருடத்தினை பதிவு செய்து தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம்.
www.tnresults.nic.in
www.dge1.tn.nic.in
www.dge2.tn.nic.in
ஆகிய இணையதளங்கள் மூலம் அறிந்து கொள்ள முடியும்.
மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களில் கட்டணம் இன்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
மேலும் பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளியில் உறுதிமொழி படிவத்தில் கொடுத்த செல்போன் எண்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்.
அதேபோல் தனித்தேர்வர்களும் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் பொழுது அளித்த செல்போன் எண்களுக்கு தேர்வு முடிவுகள் sms மூலம் அனுப்பப்படும்.
தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை மே மாதம் 2ம் தேதி முதல் பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளியின் தலைமை ஆசிரியர் மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய மையத்தில் தலைமையாசிரியர் மூலமாகவும் பெற்றுக் கொள்ளலாம். மே 6ம் தேதி முதல் பள்ளி மாணவர்களும் தனித்தேர்வர்களும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை தங்களின் பிறந்த தேதி மற்றும் பதிவு எண் ஆகிய விவரங்களை அளித்து www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.