ETV Bharat / city

தேர்தல் செலவுகள் கண்காணிப்பு -  தேர்தல் அலுவலர்களுடன் சத்யபிரதா சாகு ஆலோசனை - தேர்தல் செலவுகள் கண்காணிப்பு

சென்னை: தேர்தல் செலவுகளை கண்காணிப்பது தொடர்பாக செலவின பார்வையாளர்களுடன் தமிழ்நாடு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு   ஆலோசனை மேற்கொண்டார்.

sathyapratha sahoo
சத்யபிரதா சாகு
author img

By

Published : Mar 9, 2021, 6:30 PM IST

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில், தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தேர்தல் சிறப்பு செலவின பார்வையாளர்கள் மது மகாஜன், பாலகிருஷ்ணன் ஆகியோருடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் வருமான வரித்துறை, சுங்கத்துறை, வணிகவரித் துறை, துணை ராணுவப் படை, காவல் துறை உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அப்போது உரிய ஆவணங்கள் இன்றி ஐம்பதாயிரத்துக்கும் அதிகமாக பணம் கொண்டு சென்றால், பறிமுதல் செய்ய எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், மாவட்ட வாரியாக வாகன சோதனைகளை அதிகரிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

கூகுள் பே (G Pay), போன் பே (Phone pay) உள்ளிட்ட டிஜிட்டல் முறைகளில் வாக்காளர்களுக்கு பணம் பரிமாற்றம் செய்வதை தடுப்பது தொடர்பாகவும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

வேட்பாளர்கள் தேர்தல் செலவுக்காக அதிகபட்சம் 30 லட்சம் ரூபாய் வரை செலவு செய்யலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ள நிலையில், வேட்பாளர்கள் தேர்தல் செலவுகளை கண்காணிப்பது குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

இதையும் படிங்க: தேர்தலைப் புறக்கணிப்பதாக தூத்துக்குடி விவசாயிகள் அறிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.