ETV Bharat / city

தமிழ்நாடு பட்ஜெட் - பூவுலகின் எதிர்பார்ப்புகள் என்ன? - பூவிலகின் நண்பர்கள்

தமிழ்நாட்டில் தாக்கலாகவுள்ள பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய சூழலியல் அம்சங்கள் குறித்து ‘பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பின் சார்பில் கோரிக்கைகள் நிரம்பிய பிரசுரம் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு பட்ஜெட்
தமிழ்நாடு பட்ஜெட்
author img

By

Published : Aug 12, 2021, 8:07 PM IST

Updated : Aug 12, 2021, 9:41 PM IST

சென்னை: ‘பூவுலகின் நண்பர்கள்’ என்பது அனைத்து வர்க்க மக்களுக்கும் சுற்றுச்சூழல்நீதி கிடைக்கச் செய்வது உள்ளிட்ட பல அடிப்படைகளை நோக்கமாகக் கொண்டுள்ள இயற்கைப் பாதுகாப்பு அமைப்பாகும்.

தமிழ்நாட்டில் நாளை தாக்கலாகும் பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய சூழலியல் அம்சங்கள் குறித்து ‘பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பு சார்பில் சில கோரிக்கைகள் நிரம்பிய பிரசுரம் வெளியிடப்பட்டுள்ளது. அதில்,

காலநிலை மாற்றம்: தமிழ்நாட்டில் காலநிலை மாற்றம், ஒருங்கிணைந்த நலத்துக்கான ஆணையம் அமைக்கப்பட வேண்டும்.

புதுப்பிக்கத்தக்க ஆற்றல்: புதிதாகக் கட்டப்படும், திட்டமிடப்படும் அனைத்து அனல்மின் நிலைய கட்டுமானங்களையும் நிறுத்திவிட்டு, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையில் அதிகமாக முதலீடு செய்ய வேண்டும்.

நீர் பாதுகாப்பு: மாநிலம் முழுக்க, அனைத்து நீர்நிலைகளையும் அவற்றின் முழு திறனை அடையும் அளவுக்கு சரிசெய்ய திட்டம் வகுக்க வேண்டும்.

பொதுப் போக்குவரத்து: பொதுப் போக்குவரத்து கட்டமைப்புகளில் அதிக அளவிலான முதலீடுகளைச் செய்ய வேண்டும்.

காடுகள் பாதுகாப்பு: காடுகள் பாதுகாப்பு மற்றும் காட்டுயிர் குற்றங்களைத் தடுக்க கூடுதல் கவனம், நிதி ஒதுக்க வேண்டும்.

காட்டுயிர் மருத்துவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.

நீரியல் சரணாலயம்: எண்ணூர், பழவேற்காடு பகுதிகளை நீரியல் சரணாலயமாக அறிவிக்க வேண்டும்.

தொழில்துறை: தமிழ்நாட்டில் அதிக தொழில்மயமாக்கப்பட்ட பகுதிகளில் காற்று, நீர், நிலத்தில் ஏற்பட்ட மாசுபாடுகள் குறித்து ஆராய்ந்து மறுசீரமைக்க திட்டங்கள் அறிவிக்க வேண்டும்.

சதுப்புநிலங்கள்: தமிழ்நாடு முழுவதுமுள்ள சதுப்பு நிலங்களை வகைப்படுத்தி, அவற்றைப் பாதுகாப்பதற்கான திட்டங்களை அறிவிக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளனர்.

இதையும் படிங்க: பட்ஜெட் 2021: புதுமையை புகுத்தியிருப்பாரா பிடிஆர்... ஓர் அலசல்!

Last Updated : Aug 12, 2021, 9:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.