ETV Bharat / city

குடியுரிமை திருத்தச் சட்டம்: சட்டப்பேரவையில் மூன்றாம் நாளும் காரசார விவாதம்

author img

By

Published : Jan 8, 2020, 3:24 PM IST

சென்னை: குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக சட்டப்பேரவையில் மூன்றாவது நாளான இன்றும் காரசாரமாக விவாதம் நடைபெற்றது.

சட்டப்பேரவை
சட்டப்பேரவை

இன்று நடைபெற்ற மூன்றாம் நாள் சட்டப்பேரவை நிகழ்வில், ஆளுநர் உரை மீது நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் விவாதம் நடைபெற்றது.

அப்போது பேசிய எதிர்க்கட்சிச் தலைவர் ஸ்டாலின்: ஆளுநர் உரை, அரசின் செய்தி அறிக்கைபோல் அமைந்துள்ளது . Railway guide போல் உள்ளது. அதில், குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து தேடித்தேடிப் பார்த்தேன் எதுவும் இல்லை என்றார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சபாநாயகர்: குடியுரிமை திருத்தச் சட்டம் பற்றி நிறைய பேசிவிட்டோம். எனவே, வேறு விஷயங்கள் பேசுங்கள் என்றார்.

ஸ்டாலின் கருத்துக்கு பதிலளித்த வருவாய்த் துறை அமைச்சர் உதயகுமார் : குடியுரிமை திருத்தச் சட்டம் தமிழ்நாட்டில் உள்ள சிறுபான்மை மக்களைப் பாதிக்காது. இது தொடர்பாக பிரதமர்கூட விளக்கம் அளித்துள்ளார். அப்படி இருக்க மீண்டும் மீண்டும் அதைப் பற்றியே பேசுவது சரியல்ல. குடியுரிமை சட்டத்தால் தமிழ்நாடு சிறுபான்மை மக்களுக்கு எந்தப் பாதிப்பும் வராது. இதை நான் பொதுக்கூட்டத்தில் பேசவில்லை. சட்டப்பேரவையில் சொல்கிறேன் என்றார்.

உதயகுமார் பேசிய பின்னர் பேசிய எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன், அமைச்சர்கள் பொதுக்கூட்டத்தில் பேசுவதுபோல நீளமாகப் பேசுகிறார்கள். நேரத்தை வீணடிக்காமல் பேச வேண்டும் என்றார்.

இதனைக் கடுமையாக ஆட்சேபித்து காட்டமாகப் பேசிய முதலமைச்சர்: அமைச்சர்கள் எப்படிப் பேச வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் உத்தரவு போட முடியாது. எங்களை அதிகாரம் செய்ய நினைத்தால் அது நடக்காது. யாருக்கும் அஞ்சும் அரசு இது அல்ல என்றார்.

முதலமைச்சரின் இந்தப் பேச்சுக்கு திமுக உறுப்பினர்கள் அனைவரும் கூச்சலிட்டு கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். அப்போது அவையில் சற்று நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

அதனைத் தொடர்ந்து பேசிய சபாநாயகர், முதலமைச்சரைப் பேசவிடாமல் செய்வது சரி அல்ல என்று அவையை அமைதிப்படுத்தினார்.

பின்னர் பேசிய முதலமைச்சர்: எதிர்க்கட்சித் துணைத் தலைவர் மூத்தவர். அவரை நாங்கள் மதிக்கிறோம். அவர் எங்களுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்றார்.

இறுதியாக பேசிய எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன், எந்த உறுப்பினர் பேசினாலும், அமைச்சர்கள் விளக்கம் அளிக்க உரிமை உண்டு. ஆனால், ஒவ்வொரு பதில் பேசும்போதும் அவர் நீண்ட நேரம் எடுத்துக்கொள்கிறார். அவரை சுருக்கமாகச் சொல்லச் சொன்னேன். முதலமைச்சர் கோபித்துக் கொள்ள வேண்டாம் எனத் தெரிவித்து விவாதத்தை முடித்தார்.

Intro:Body:குடியுரிமை சட்ட திருத்தம் தொடர்பாக மூன்றாம் நாளும் காரசார விவாதம்

இன்று நடைபெற்ற மூன்றாம் நாள் சட்டப்பேரவை நிகழ்வில்,
ஆளுனர் உரை மீது நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் விவாதம் நடைபெற்றது.

அப்போது பேசிய எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் :
ஆளுநர் உரை, அரசின் செய்தி அறிக்கை போல் அமைந்துள்ளது .
Railway guide போல் உள்ளது. அதில்,
குடியுரிமை சட்ட திருத்தம் பற்றி தேடி தேடி பார்த்தேன் எதுவும் இல்லை என்றார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சபாநாயகர் :
குடியுரிமை சட்ட திருத்தம் பற்றி நிறைய பேசி விட்டோம். எனவே, வேறு விஷயங்கள் பேசுங்கள் என்றார்.

ஸ்டாலின் கருத்துக்கு பதிலளித்த வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் :
குடியுரிமை சட்ட திருத்தம் தமிழகத்தில் உள்ள சிறுபான்மை மக்களை பாதிக்காது.இது தொடர்பாக பிரதமர் கூட விளக்கம் அளித்துள்ளார். அப்படி இருக்க மீண்டும் மீண்டும் அதைப் பற்றியே பேசுவது சரியல்ல.
குடியுரிமை சட்டத்தால் தமிழக சிறுபான்மை மக்களுக்கு எந்த பாதிப்பும் வராது. இதை நான் பொதுக் கூட்டத்தில் பேச வில்லை. மாண்பு பொருந்திய சட்டமன்றத்தில் சொல்கிறேன் என்றார்.

உதயகுமார் பேசிய பின்னர் பேசிய எதிர்கட்சி துணை தலைவர் துரைமுருகன்,
அமைச்சர்கள் பொது கூட்டத்தில் பேசுவது போல நீளமாக பேசுகிறார்கள். நேரத்தை வீணடிக்காமல் பேச வேண்டும் என்றார்.

இதனை கடுமையாக ஆட்சேபித்து காட்டமாக பேசிய முதல்வர்,
அமைச்சர்கள் எப்படி பேச வேண்டும் என்று எதிர்கட்சி தலைவர் உத்தரவை போட முடியாது. எங்களை அதிகாரம் செய நினைத்தால் அது நடக்காது. யாருக்கும் அஞ்சும் அரசு இது அல்ல என்றார்.

முதல்வரின் இந்த பேச்சுக்கு திமுக உறுப்பினர்கள் அனைவரும் பதிலுக்கு கூச்சலிட்டு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அப்போது அவையில் சற்று நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

அப்போது பேசிய சபாநாயகர்,
முதல்வரை பேச விடாமல் செய்வது சரி அல்ல என்று அவையை அமைதிப் படுத்தினார்.

பின்னர் பேசிய முதலமைச்சர் :
எதிர்கட்சி துணை தலைவர் மூத்தவர். அவரை நாங்கள் மதிக்கிறோம். அவர் எங்களுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்றார்.

குடியுரிமை சட்ட வழக்கு நிலுவையில் உள்ளது.
எனவே, அது குறித்து பேச வேண்டாம் என்றார் சபாநாயகர்.

இறுதியாக பேசிய எதிர்கட்சி துணை தலைவர் துரைமுருகன்,
எந்த உறுப்பினர் பேசினாலும், அமைச்சர்கள் விளக்கம் அளிக்க உரிமை உண்டு.
ஆனால், ஒவ்வொரு பதில் பேசும் போதும் அவர் நீண்ட காலம் எடுத்துக் கொள்கிறார்.
அவரை சுருக்கமாக சொல்ல சொன்னேன்.
முதல்வர் கோபித்துக் கொள்ள வேண்டாம் என தெரிவித்து விவாதத்தை முடித்தார்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.