ETV Bharat / city

தேசிய அளவிலான சாராஸ் மேளா மற்றும் நவராத்திரி விற்பனைக் கண்காட்சி - இன்னும் ஒருவாரத்திற்கு நீட்டிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை - Tamil Nadu Women Development Institute

சென்னை கலைவாணர் அரங்கத்தில் தேசிய அளவிலான சாராஸ் மேளா மற்றும் நவராத்திரி விற்பனைக் கண்காட்சி 06.09.2022 முதல் 18.09.2022 நடைபெறுகிறது. இதனை இன்னும் ஒருவாரத்திற்கு நீட்டிக்க வேண்டும் என்று பொதுமக்கள் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Etv Bharat தேசிய அளவிலான சாராஸ் மேளா மற்றும் நவராத்திரி விற்பனைக் கண்காட்சி- இன்னும் ஒருவாரத்திற்கு நீட்டிக்க வேண்டும் என பொதுமக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை

author img

By

Published : Sep 17, 2022, 6:41 PM IST

சென்னை: நவராத்திரி திருவிழா நெருங்கியுள்ள நிலையில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில், சென்னை, கலைவாணர் அரங்கத்தில் அமைக்கப்பட்டுள்ள சாரஸ் மேளா மற்றும் நவராத்திரி விற்பனை கண்காட்சியினை ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் 06.09.2022 அன்று தொடக்கி வைத்தார்.

இதுக்குறித்து பொம்மை விற்பனையாளர் பத்மினி கூறுகையில், “இந்தக் கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள 120-க்கும் மேற்பட்ட அரங்குகளில், ஆந்திரா மாநிலத்தின் மர வேலைபாடு நிறைந்த அழகிய சிற்பங்கள், கொண்டப்பள்ளி பொம்மைகள், கோவா மாநிலத்தின் வண்ண படுக்கை விரிப்புகள், அனைவருக்கும் ஏற்ற ஆயத்த ஆடைகள், இமாச்சல பிரதேசத்தின் கண்கவர் எம்ப்ராய்டரி துணி வகைகள், ஜார்கண்ட் மாநிலத்தின் தரமான கைத்தறி புடவைகள், கர்நாடக மாநிலத்தின் சிறந்த மரச் சிற்பங்கள், புடவைகள், கேரள மாநிலத்தின் புகழ் பெற்ற உலர் பழங்கள், சுவையான தின்பண்டங்கள், சமையல் பொருட்கள், ராஜஸ்தான் மாநிலத்தின் வண்ணம் மிகுந்த தரை விரிப்புகள் மற்றும் உத்தரபிரதேச மாநிலத்தின் சணல் மற்றும் கலைநயம் மிகுந்த கைவினைப் பொருட்கள் ஆகியவை விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

அதேபோல தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் அனைத்து மாவட்டங்களிலும் செயல்பட்டு வரும் மகளிர் சுய உதவிக் குழுக்களின் தயாரிப்புப் பொருட்களான தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள், நாச்சியார்கோவில் குத்து விளக்குகள், செங்கல்பட்டு கொலு பொம்மைகள், கடலூர் முந்திரிப் பருப்பு, தருமபுரி சிறுதானிய தின்பண்டங்கள், ஈரோடு தரை விரிப்புகள், காஞ்சிபுரம் கொலு பொம்மைகள், பட்டுப் புடவைகள் போன்றவைகளும் கிடைக்கும்.

தேசிய அளவிலான சாராஸ் மேளா மற்றும் நவராத்திரி விற்பனைக் கண்காட்சி- இன்னும் ஒருவாரத்திற்கு நீட்டிக்க வேண்டும் என பொதுமக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை

மேலும், கன்னியாகுமரி வாழைநார் பொருட்கள், தின்பண்டங்கள், நாமக்கல் கொல்லிமலை அரபுளி காபித்தூள், கரூர் துணிப்பைகள், கைத்தறி துண்டுகள், சிவகங்கை பாரம்பரிய அரிசிகள், சத்துமாவு, வெட்டிவேர் பொருட்கள், திருவண்ணாமலை ஜவ்வாது மலை தேன், சிறுதானியங்கள், தூத்துக்குடி பனை பொருட்கள், பனை வெல்லம் (கருப்பட்டி), விழுப்புரம் சுடுமண் சிற்பங்கள், கோரைப் பொருட்கள், அலங்கார விளக்கு திரைகள், விருநகர் செட்டிநாடு புடவைகள், அரியலூர் முந்திரி பருப்பு, கோயமுத்தூர் மூலிகை சோப்புகள், திண்டுக்கல் சின்னாளப்பட்டி சேலைகள், திருச்சி செயற்கை ஆபரணங்கள், தேனி சானிடரி நாப்கின் மற்றும் திருநெல்வேலி அல்வா போன்ற பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு அரசின் தோட்டக்கலை, ஆவின், கோஆப்டெக்ஸ் மற்றும் பூம்புகார் ஆகிய துறைகளின் அரங்குகளும், பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக சுற்றுச்சூழலுக்கு தீங்கு ஏற்படுத்தாத துணிப்பைகள், மஞ்சப்பைகள் விற்பனை செய்யும் அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன.

18 ஆம் தேதி வரை நாள்தோறும் காலை 10.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை நடைபெறும் இக்கண்காட்சி வளாகத்தில் தினந்தோறும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. இலவசமாக வாகனங்கள் நிறுத்துமிடம், குழந்தைகளுக்கான பல்வேறு விளையாட்டுகள் போன்ற பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த இக்கண்காட்சிக்கு அனுமதி இலவசம்.

இதில் நவராத்திரி விற்பனைக் கண்காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பல்வேறு மாநில மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரித்த தரமான பொருட்களை விற்பனை செய்து, மகளிர் சுய உதவிக் குழுக்களின் பொருளாதார முன்னேற்றம் அடைகின்றனர். கிழங்கு மாவில் இந்த பொம்மைகள் செய்யப்படுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கைவினைப் பொருட்கள் விற்பனையாளர் தனலட்சுமி கூறுகையில், “இந்த கொலு பொம்மைகள் முழுக்க முழுக்க கிழங்கு மாவை பயன்படுத்தி செய்யப்படுகிறது. இந்த தொழிலை நம்பி 150 பேர் உள்ளனர். இந்த பொம்மை விற்பனை தற்போது நன்றாக உள்ளது. இதன் மூலம் எங்களுடைய 150 பேர் பயனடைகிறோம். இந்த வருடம் தஞ்சாவூர் தலையாட்டு ராஜா, ராணி பொம்மை பெரிய அளவில் செய்து காட்சிப்படுத்தியுள்ளோம். குறைந்தபட்சமாக 100 ரூபாய் முதல் 20 ஆயிரம் வரை பொம்மைகள் விற்கப்படுகிறது.

விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த நாங்கள் ஆரோவில் எங்கள் குழுவிலுடன் சேர்ந்து கைப்பொருட்களை செய்து வருகிறோம். மரத்தினால் ஆன பொருட்கள் கிளி உள்ளிட்ட பறவைகள் செய்து காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. நூற்களால் ஆன light lamp கைகளால் செய்து காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் விரும்பி வாங்கி செல்கின்றனர். light lamp-ஐ கொலுவிற்கு பயன்படுத்த வாங்கி செல்கின்றனர். இது 200 முதல் 2000 வரை விற்கப்படுகிறது ” எனத் தெரிவித்தார்.

இதுகுறித்து வாடிக்கையாளர் பிரியா கூறுகையில், ”கடந்த முறை மலர் கண்காட்சி பார்க்க வந்தபோது கூட்ட நெரிசல் காரணமாக பார்க்க முடியாமல் சென்று விட்டோம். ஆனால் தற்போது இங்கு வந்து பார்த்தபோது நிறைய பொருட்களை வீட்டிற்கு தேவையானவற்றை வாங்கி உள்ளோம். மேலும் அரசு சார்பாக இவர்களுக்கு உணவு, தங்குமிடம் தந்து இருப்பதாக இங்குள்ள கடைக்காரர்கள் தெரிவித்தனர். எல்லா பொருட்களும் சிறப்பாக உள்ளது. கொலு பொம்மைகள் கண்ணை கவரும் வகையில் உள்ளது. மேலும் இங்கு விற்கப்படும் பொருட்கள், தரமானதாகவும் சுகாதாரமாக காணப்படுவதால் நிறைய பொருட்கள் வாங்கப்பட்டுள்ளது.மேலும் இந்த கண்காட்சியை இன்னும் சில தினங்களுக்கு நீட்டிக்க வேண்டும்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: தென்னாங்கூர் பாண்டுரங்கன் கோயிலில் கோகுலாஷ்டமி விழா கோலாகலம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.