சென்னை செங்குன்றம் பேருந்து நிலையத்தில் காவல் துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையிலிருந்த இளைஞர்கள் இருவரிடம் விசாரணை நடத்தியபோது அவர்கள் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை அளித்துள்ளனர்.
அவர்களைப் பிடித்துக் காவல் நிலையம் கொண்டுவந்து சோதனை செய்தபோது, இருவரிடமும் 15 கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது. மேற்கொண்டு அவர்களிடம் நடத்திய விசாரணையில் மாதவரத்தில் ரம்யா என்பவர் தங்களுக்குக் கஞ்சா விநியோகம் செய்ததாகக் கூறியதன் பேரில், ரம்யாவின் வீட்டிற்குச் சென்று காவல் துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.
உலகிலேயே மிக உயரமான சிவலிங்கம் வழிபாட்டிற்காக திறப்பு!
அப்போது அங்கு 1.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து செங்குன்றம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்ட மூவரையும் நீதிமன்றத்தில் முன்னிறுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.