திருவள்ளூர் : சென்னையில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில்களில் திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயிலும் ஒன்று. இங்கு சென்னை புறநகர் மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகள், பெங்களூரு, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் தினந்தோறும் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.
இந்த நிலையில் கோயிலுக்கு வரும் பக்தர்கள் அளிக்கும் காணிக்கைகளை கோயில் அலுவலர்கள் முன்னிலையில் மாதத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு மாதத்திற்கு ஒரு முறை எண்ணுவது வழக்கம்.
இந்த நிலையில் திருவேற்காடு கருமாரியம்மன் கோயிலில் உள்ள உண்டியல்களில் பக்தர்கள் அளித்த காணிக்கை இன்று (நவ.23) எண்ணப்பட்டது. இதில் ஏராளமான ஊழியர்கள் கலந்து கொண்டு பக்தர்கள் அளித்த காணிக்கைகளை எண்ணினார்கள்.
கோயில் இணை கமிஷனர் லட்சுமணன் தலைமையில் காணிக்கை என்னும் பனி நிறைவடைந்த நிலையில் ரூ.50 லட்சத்து 26 ஆயிரம் பணமும், 926 கிராம் தங்க நகைகள், 1710 கிராம் வெள்ளியை பக்தர்கள் காணிக்கையாக அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வங்கி அலுவலர்கள் முன்பு பணம் என்னும் இயந்திரம் வைத்து காணிக்கைகள் எண்ணப்பட்டு கோயில் நிர்வாகம் பெயரில் வங்கியில் இவை அனைத்தும் டெபாசிட் செய்யப்படும் எனக் கோயில் நிர்வாக அலுவலர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : திருப்பதி ஏழுமலையானுக்கு 3 கிலோ தங்கம் காணிக்கை வழங்கிய கோவை தொழிலதிபர்