புதுச்சேரியில் விசிக தலைவர் தொல். திருமாவளவன் இன்று (மார்ச் 26) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், தமிழ்நாட்டில் ஆறு தொகுதிகளிலும், புதுச்சேரியில் ஒரு தொகுதியிலும் பானை சின்னத்தில் போட்டியிடுகிறோம். மதவாத சக்தியான பாஜகவை முறியடிக்க திமுக தலைமையிலான கூட்டணி இரண்டு ஆண்டுகளாகப் போராடியது.
அதில், வரும் தேர்தலில் வெற்றிபெறும். புதுச்சேரி அரசை பாஜக கலைத்தது மிக மோசமான ஜனநாயகப் படுகொலை. அறுவறுப்பின் உச்சம். எதிர்க்கட்சிகளை அழிப்பதும் கூட்டணிக் கட்சிகளை அரவணைத்து ஒழிப்பதும்தான் பாஜகவின் கொள்கை.
தமிழ்நாட்டை அதிமுகவை வைத்தும், புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரசை வைத்தும் பாஜக கால் ஊன்ற முயற்சிக்கிறது. இதற்குத் தமிழ்நாடு-புதுச்சேரி மக்கள் அனுமதிக்கக் கூடாது.
யூனியன் பிரதேசம் என்பதால் புதுச்சேரி அரசை மத்திய அரசு முடக்கியது. இதே நிலையை டெல்லி போன்ற யூனியன் பிரதேசங்களை பாஜக கையாளுகிறது. எப்படியாவது புதுச்சேரியில் ஆட்சிக்கு வர பாஜக துடிக்கிறது. தமிழ்நாடு-புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் பாஜக வெற்றிபெற்றால் மத சமூக நல்லிணக்கத்தைச் சீரழித்துவிடும்.
ஓரிரு நாளில் புதுச்சேரிக்கென தேர்தல் அறிக்கை வெளியிடப்படும். யூனியன் பிரதேசம் என்பதிலிருந்து மாநில அந்தஸ்தாக உயர விசிக வலியுறுத்தும்" என்று கூறினார்.
இதையும் படிங்க: இந்தியாவை விற்கும் பாஜக - திருமா காட்டம்!