இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”அனைவருக்கும் கல்வி என்பதற்கு மாறாக ஒரு சிலருக்கு மட்டுமே கல்வி என்ற வர்ணாசிரமக் கோட்பாட்டை மீண்டும் புகுத்துவதே, தேசிய கல்விக் கொள்கையின் நோக்கமாகும். இந்த கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்தக் கூடாது என மத்திய மாநில அரசுகளை வலியுறுத்துகிறோம்.
மேலும், இதனை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் விவாதிக்காமல், மாநில அரசுகளின் கருத்தை அறியாமல் நடைமுறைப்படுத்த முற்படுவது, முழுக்க முழுக்க மக்கள் விரோத, ஜனநாயக விரோத செயலாகும்.
எல்லாவற்றுக்கும் மேலாக மும்மொழிக் கொள்கையை தேசிய கல்விக் கொள்கை திணிக்கிறது. எந்தவொரு வளர்ச்சியடைந்த நாட்டிலும் மும்மொழிக்கொள்கை என்பது பின்பற்றப்படவில்லை.
இந்நிலையில் இந்தியையும், சமஸ்கிருதத்தையும் பிறர் மீது திணிக்க முயல்வது ஏற்புடையதல்ல. குறிப்பாக, தமிழ்நாட்டு மக்கள் இந்தித் திணிப்பை ஒருபோதும் ஏற்கமாட்டார்கள்.
இது குறித்து தமிழ்நாட்டின் ஒன்றுபட்ட கருத்தை மத்திய அரசுக்கு தெரிவிக்கும் விதமாக அனைத்துக்கட்சி கூட்டத்தைக் கூட்டுமாறு முதலமைச்சரை வலியுறுத்துகிறோம் ” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் புதிய கல்விக் கொள்கை நடைமுறைப்படுத்தப்படுமா?