ETV Bharat / city

அதிமுக தொண்டர்கள் முறியடிக்க வேண்டும்: திருமாவளவன் - admk

சென்னை: மத்திய அரசின் தலையீடுகளை அதிமுக தொண்டர்கள் முறியடிக்க வேண்டும் என சிதம்பரம் தொகுதி எம்.பி. திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

திருமாவளவன்
author img

By

Published : Jun 17, 2019, 1:52 PM IST

சென்னை விமான நிலையத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”நாடாளுமன்றத்தில் இரண்டு நாட்கள் பதவியேற்பு உறுதிமொழி, அதன்பின் சபாநாயகர் தேர்வு நடக்கிறது. இரு அவையில் குடியரசுத் தலைவர் பேசுவார். மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் இரண்டு பேர் வென்றுள்ளோம்.

தொகுதிகளின் நலனுக்காகவும் தமிழ்நாட்டின் நலனுக்காகவும் இந்திய அரசியலமைப்புச் சட்ட பாதுகாப்பு, மதச்சார்பின்மை, ஜனநாயகத்தின் பாதுகாப்புக்கும் நாடாளுமன்றத்தில் எங்களால் இயன்ற அளவில் அழுத்தமாக குரல் கொடுப்போம்.

அனைத்து தரப்பு விளிம்பு மக்களின் ஜனநாயக உரிமையை பாதுகாப்பதுதான் பெரும் சவாலாக உள்ளது. ஹைட்ரோகார்பன் திட்டத்தை முற்றிலும் கைவிட வேண்டும். தமிழ்நாடு பாலைவனம் ஆகும் நிலையை ஏற்படுத்தும் வகையில் காவிரி உள்பட ஆற்றுநீர் சிக்கல்கள் தீர்க்கப்படாமல் உள்ளன. ஆற்று நீர் சிக்கலைத் தீர்க்க குரல் கொடுப்போம்.

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி வலியுறுத்துவோம். தேசிய கல்விக் கொள்கை என்ற பெயரில் கல்வி கொள்கையை காவி மயமாக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. தேசியக் கல்விக் கொள்கையில் இந்தி, சமஸ்கிருதத்தை விரும்புகின்ற சனாதன கலாசார திணிப்பு முயற்சிகளை முறியடிக்கின்ற வகையில் குரல் கொடுப்போம். கூடங்குளம் அணுக் கழிவுகளை அதன் வளாகத்திலேயே அமைக்கின்ற முயற்சி அதிர்ச்சியை தருகிறது. கூடுதலாக அணு உலைகளை திறக்கக் கூடாது. இயங்குகின்ற அணு உலைகளை மூட வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்போம்.

பிரதமரை சந்தித்த முதலமைச்சர் தமிழ்நாடு பிரச்னைகள் குறித்து மனு தந்ததாக கூறப்படுகிறது. அதிமுக உட்கட்சி பிரச்னைகள் பற்றிதான் பிரதமரிடம் பேசியதாகவும் தமிழ்நாடு பிரச்னைகள் பற்றி பேசியதாகவும் தெரியவில்லை. அது கண்துடைப்பு என்று விமர்சனங்களும் எழுந்துள்ளன. தமிழ்நாடு அரசு சுதந்திரமாக செயல்பட வேண்டும்.

மத்திய அரசின் தலையீடு இருப்பதால்தான் அதிமுகவில் இரட்டை தலைமை பிரச்னை வெடித்துள்ளது. இரட்டை தலைமை என்பதை டெல்லியின் தலைமை, தமிழ்நாடு தலைமை என புரிந்து கொள்ள வேண்டி உள்ளது. அதிமுகவில் மோடியும் தலைமை தாங்குகிறார் என்பதை மறைமுகமாக சொல்லுகிற செய்தி என நம்புகிறேன். மத்திய அரசின் தலையீடுகளை அதிமுக தொண்டர்கள் முறியடிக்க வேண்டும்” என்றார்.

திருமாவளவன் செய்தியாளர் சந்திப்பு

மேலும், தமிழ்நாட்டில் வெற்றிபெற்ற எம்.பி.க்கள் சொத்துக்களை விற்று வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறியது பற்றி கேட்டதற்கு பதிலளித்த அவர், ‘தமிழ்நாட்டில் காலூன்ற முடியாததால் பாஜக மிகுந்த அதிர்ச்சி அடைந்திருக்கிறது. அந்த விரக்தியின் வெளிப்பாடாகத்தான் பொன்.ராதாகிருஷ்ணன் இது போன்ற கருத்துகளை சொல்கிறார்’ என பதிலளித்தார்.

இதனிடையே, பொன். ராதாகிருஷ்ணன், தனது அனைத்து சொத்துகளையும் விற்று விவசாயிகளின் கடனை தீர்க்கப்போவதாக அதிரடியாக அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Intro:விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் விமான நிலையத்தில் பேட்டிBody:சென்னை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது:-

நாடாளுமன்றத்தில் 2 நாள் பதவி ஏற்பு உறுதிமொழி நடக்கிறது. அதன்பின்னர் சபாநாயகர் தேர்வு, இரு அவையில் ஜனாதிபதி பேசுவார். பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் 2 பேர் வெற்றி பெற்று உள்ளோம்.

தொகுதிகளின் நலனுக்காகவும் தமிழகத்தின் நலனுக்காகவும் இந்தியா பாதுகாப்பு, இந்திய அரசியலமைப்பு சட்ட பாதுகாப்பு, மதசார்பின்மை, ஜனநாயகத்தின் பாதுகாக்கவும் நாடாளுமன்றத்தில் எங்களால் இயன்ற அளவில் அழுத்தமாக குரல் கொடுப்போம்.

அனைத்து தரப்பு விளிம்பு மக்களின் ஜனநாயக உரிமையை பாதுகாப்பது தான் பெரும் சவாலாக உள்ளது.

ஹைட்ரோகார்பன் திட்டத்தை முற்றிலும் கைவிட வேண்டும். தமிழகம் பாலைவனம் ஆகும் நிலையை ஏற்படுத்தும் வகையில் காவிரி உள்பட ஆற்று நீர் சிக்கல்கள் தீர்க்கப்படாமல் உள்ளது. ஆற்றுநீர் சிக்கலை தீர்க்க குரல் கொடுப்போம்.

நீட் தேர்வை ரத்து செய்ய கோரி வலியுறுத்துவோம். தேசிய கல்வி கொள்கை என்ற பெயரில் கல்வி கொள்கையை காவி மையமாக்கும் முயற்சியில் அரசு ஈடுப்பட்டு உள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. தேசிய கல்வி கொள்கையில் இந்தி, சமஸ்கிருதம், விரும்புகின்ற சனாதனா கலாச்சார திணிப்பு முயற்சிகளை முறியடிக்கின்ற வகையில் குரல் கொடுப்போம்.

கூடங்குளம் அணு கழிவுகளை அதன் வளாகத்திலேயே அமைக்கின்ற முயற்சி அதிர்ச்சியை தருகிறது. கூடுதலாக அணு உலைகளை திறக்க கூடாது. இயங்கின்ற அணு அலைகளை மூட வேண்டும் என்று பாராளுமன்றத்தில் குரல் கொடுப்போம்.

பிரதமரை சந்தித்த முதலமைச்சர் தமிழக பிரச்சனைகள் குறித்து மனு தந்ததாக கூறப்படுகிறது. அதிமுக உட்கட்சி பிரச்சனைகள் பற்றி தான் பிரதமரிடம் பேசியதாகவும் தமிழக பிரச்சனைகள் பற்றி பேசியதாக தெரியவில்லை. அது கண்துடைப்பு என்று விமர்சனங்களும் எழுந்து உள்ளன. தமிழக அரசு சுதந்திரமாக செயல்பட வேண்டும்.

மத்திய அரசின் தலையீடு இருப்பதால் தான் அதிமுகவில் இரட்டை தலைமை பிரச்சினை வெடித்து உள்ளது. இரட்டை தலைமை என்பதை டெல்லியின் தலைமை, தமிழக தலைமை என புரிந்து கொள்ள வேண்டி உள்ளது. அதிமுகவை மோடியும் தலைமை தாங்குகிறார் என்பதை மறைமுகமாக சொல்லுகிற செய்தி என நம்புகிறேன்.

அதிமுகவும், தமிழக அதிமுக அரசும் சுதந்திரமாக இயங்க வேண்டும். மத்திய அரசின் தலையீடுகளை அதிமுக தொண்டர்கள் முறியடிக்கப்பட வேண்டும்.

ஒரே நேரத்தில் நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்கள் நடந்ததால் நல்லது தான். தேர்தல் செலவுகள் மிச்சமாகும். ஆனால் இது எந்தளவுக்கு சாத்தியமானது என தெரியவில்லை. ஒவ்வொரு மாநிலங்களில் கால இடைவேளை உள்ளது. இதை எப்படி சீர் செய்ய முடியும் என்று தெரியவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

தமிழகத்தில் வெற்றி பெற்ற எம்.பிக்கள் சொத்துக்களை வெற்றி வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறியது பற்றி கேட்டதற்கு,
தமிழகத்தில் காலுன்ற முடியாததால் பா.ஜ.க. கட்சி மிகுந்த அதிர்ச்சி அடைந்து இருக்கிறது. அந்த விரக்தியின் வெளிப்பாடாக தான் பொன்.ராதாகிருஷ்ணன் இது போன்ற கருத்துக்களை சொல்கிறார். மத்தியில் பா.ஜ.க. அரசு இருக்காது. நாங்கள் ராஜினாமா செய்கிறோம் என்ற முடிவை எடுத்தால் தமிழகத்தில் தேர்ந்து எடுக்கப்பட்ட எம்.பிக்களுக்கு அந்த பொறுப்பு இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம். ஆனால் ஆளும்கட்சியாக உள்ள பா.ஜ.க. தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களுக்கும் தான் ஆட்சியை நடத்துகிறது என்பதை மறந்துவிடக்கூடாது. வாக்களிக்காத மாநிலங்கள், வெற்றி பெற முடியாத மாநிலங்கள் எல்லாம் இந்தியாவில் இல்லை என்ற உணர்வு பா.ஜ.க.விற்கு ஏற்பட்டு உள்ளதன் முலம் தேசத்தை எப்படி நேசிக்கிறார்கள் என்பது வெளிப்பட்டு உள்ளது என்றார்.Conclusion:இவ்வாறு சென்னை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களுக்கு கூறினார்
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.