ETV Bharat / city

கைதிகளை விரும்பி மணம் முடிக்கிறார்களா பெண்கள்? - மகளிர் ஆணையம் பதில் - கைதி திருமணம்

சென்னை : பெண்கள், சுய விருப்பத்தின் பேரில்தான் தண்டனைக் கைதிகளை திருமணம் செய்கிறார்களா என்பதை விசாரிக்க தங்களுக்கு அதிகாரம் இல்லை என தேசிய மகளிர் ஆணையம் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

commission
commission
author img

By

Published : Sep 30, 2020, 8:17 PM IST

தண்டனைக் கைதிகளாக இருப்பவர்களுக்கு விடுப்பு அல்லது பரோல் கோரி மனைவிகள் தொடர்ந்த பல வழக்குகளை நீதிபதி கிருபாகரன் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது. கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, பரோலில் வந்து செல்லும் ஆயுள் தண்டனைக் கைதிகளை திருமணம் முடிக்கும் பெண்கள் குறித்து நீதிபதிகள் வேதனைத் தெரிவித்திருந்தனர்.

”ஆயுள் தண்டனைக் கைதிகளை மணம் முடிக்கும் விவகாரத்தில், மணமகள்களின் ஒப்புதல் பெறப்படுகிறதா? அல்லது மத, சாதி ரீதியாக கட்டாயப்படுத்தப்படுகிறார்களா?” என ஆராயும் நடைமுறையை உருவாக்க வேண்டுமெனத் தெரிவித்து, தேசிய மற்றும் மாநில மகளிர் ஆணையங்கள் விளக்கமளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், வேல் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (செப்.30) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தேசிய மகளிர் ஆணையத்தின் சார்பு செயலர் பிரீத்தி குமார் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ”தேசிய மகளிர் ஆணைய சட்டப்படி, ஆணையம் என்பது ஆலோசனைக்குழு மட்டுமே, அரசுக்கு உத்தரவிடும் அமைப்பு அல்ல. திருமணம் என்பது ஒருவரின் தனிப்பட்ட விவகாரம் என்பதோடு, தண்டனைக்கு உள்ளானவரை பெண்கள் திருமணம் செய்யக்கூடாது என எந்த சட்டமும் தெரிவிக்கல்லை.

உயர் நீதிமன்றத்தின் உத்தரவு என்பது ஆணையத்தின் அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டது. தண்டனைக் கைதியை திருமணம் முடிக்கும் பெண்களிடம் ஒப்புதல் பெறப்படுகிறதா அல்லது மதம் மற்றும் குடும்பத்தினரின் நிர்பந்தம் காரணமாக இத்திருமணங்கள் நடைபெறுகின்றனவா என விசாரிக்க ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை “ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து வழக்கின் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: தர்மபுரியில் கனிம வளங்களை எடுக்க அறிவித்த டெண்டருக்கு நீதிமன்றம் தடை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.