ETV Bharat / city

வன்முறையாளர் வலையில் விழ வேண்டாம் - எம்.பி. ஓபிஆர் வேண்டுகோள்! - தேனி எம்பி

சென்னை: தேனி மாவட்டத்தில் அமைதியின்மையை உருவாக்கி வன்முறையை தூண்ட நினைப்போரின் வலையில் யாரும் விழுந்துவிட வேண்டாமென எம்.பி. ஓ.பி. ரவீந்திரநாத் குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.

mp
mp
author img

By

Published : Jan 24, 2020, 5:16 PM IST

தேனி மாவட்டம் கம்பத்தில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள நேற்றிரவு, தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் அவரது காரில் சென்றார். கம்பம் பகுதியில் அவரது கார் வந்துகொண்டிருந்தபோது, இஸ்லாமிய அமைப்பினர் திடீரென்று அவருக்கு கறுப்புக்கொடி காட்டி போராட்டம் நடத்தினர்.

மேலும், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகவும், அதிமுகவிற்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

பின்னர், ரவீந்திரநாத் குமாருக்கு கறுப்புக்கொடி காட்டப்பட்டதை எதிர்த்து அதிமுக மற்றும் பாஜகவினர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில், தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ’அமைதியான தேனி மாவட்டத்தில் அமைதியின்மையை உருவாக்கி வன்முறையைத் தூண்டுவதற்காக சிலரால் மேற்கொள்ளப்பட்ட, திட்டமிடப்பட்ட எதிர்மறையான பரப்புரைக்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இத்தகைய தவறான பரப்புரை செய்பவர்களின் வலையில் மக்கள் யாரும் விழுந்துவிட வேண்டாம் ” என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: ஓபிஎஸ் மகன் ஓபிஆர் எம்.பி.க்கு எதிராக இஸ்லாமியர்கள் கருப்புக் கொடி; காரை முற்றுகையிட்டதால் பரபரப்பு!

Intro:Body:தேனி மாவட்டம் கம்பத்தில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள நேற்று இரவு தேனி எம் பி ரவீந்திரநாத் குமார் அவரது காரில் சென்றார். கம்பம் பகுதியில் அவரது கார் வருகையில், ஒரு சில இஸ்லாமிய அமைப்புகள் திடீரென்று கறுப்புக்கொடி கட்டி போராட்டம் நடத்தினர். திடீரென்று சிலர் அந்த காரை சுற்றி வளைத்து எம்பி ய தாக்க முயன்றனர். மேலும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராகவும் அதிமுக கட்சி எதிராகவும் முழக்கங்களை எழுப்பினர். இதனால் அந்த பகுதியே பரபரப்பாக்கிய து. இதுகுறித்து கண்டனம் தெரிவித்து தேனி எம் பி ரவீந்திரநாத் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமைதியான தேனி மாவட்டத்தில் அமைதி இன்மையை உருவாக்கி வன்முறையை தூண்டுவதற்காக மேற்கண்ட நபர்களினால் மேற்கொள்ளப்பட்ட முன்கூட்டியே திட்டமிடப்பட்ட முயற்சிக்கும், உள்நோக்கத்துடன் கூடிய எதிர்மறையான பிரச்சாரத்திற்கும் தேனி எம் பி கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளார். இத்தகைய தவறான பிரச்சாரம் செய்பவர்களை வலையில் மக்கள் விழுந்துவிட வேண்டாம் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.