ETV Bharat / city

5 வீடுகளில் திருட்டு! கொள்ளையர்களுக்கு வலைவீச்சு!

சென்னை: அபிராமபுரத்தில் நடந்த தொடர் திருட்டு சம்பவம் மக்களை பீதியடைய செய்துள்ளது.

கொள்ளை
கொள்ளை
author img

By

Published : Jul 16, 2020, 3:06 AM IST

சென்னை ஆர்.ஏ புரம் முதல் மெயின் ரோட்டில் அமைந்துள்ள ரமணா அடுக்குமாடி குடியிருப்பில் வசித்துவருபவர் அஞ்சலை முகர்ஜி(31). இவர் நேற்றிரவு வழக்கம் போல் தனது குடும்பத்துடன் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்தார். பின்னர் காலையில் விழித்து பார்த்தபோது வீட்டின் கதவு திறக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

இதனால் வீட்டிலுள்ள அலமாரியைப் பார்த்தபோது 2 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பிலான தங்கம் காணாமல் போயுள்ளது தெரியவந்தது. இதேபோல் அருகில் வசிக்கும் மணிகண்டன் என்பவரின் வீட்டின் தாழ்ப்பாள் உடைக்கப்பட்டு 5 ஆயிரம் ரூபாய் பணம், ஒன்றரை லட்சம் மதிப்பிலான இருசக்கர வாகனத்தை திருடிச் சென்றுள்ளனர்.

இந்தியாவில் கூகுள் நிறுவனம் எவ்வளவு முதலீடு செய்கிறது என்று தெரியுமா?

மேலும் இதேபோல் தொடர்ச்சியாக அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் தொடர்ந்து 5 வீடுகளின் பூட்டை உடைத்து கொள்ளையடித்துள்ளது தெரியவந்துள்ளது. இவர்கள் மொத்தமாக சுமார் 5 லட்சம் மதிப்பிலான பொருள்களை திருடி சென்றுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் அபிராமபுரம் காவல் துறையினருக்கு புகாரளித்துள்ளனர்.

இப்புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அங்குள்ள கண்காணிப்புப் படக்கருவியின் பதிவுகளை ஆராய்ந்தபோது, அடையாளம் தெரியாத சில நபர்கள் காரில் வந்து இறங்கி கொள்ளையடித்து சென்றது பதிவாகியுள்ளது. இதனால் வழக்குப்பதிவு செய்து, கொள்ளையடித்துச் சென்ற நபர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.