சென்னை: தீபாவளி கொண்டாட்டமாக ரஜினி நடிப்பில் 'அண்ணாத்த' திரைப்படம் நேற்று (நவம்பர் 4) உலகமெங்கும் வெளியானது. சென்னை ரோகினி திரையரங்கிலும் அண்ணாத்த திரைப்படம் திரையிடப்பட்டது.
இந்த திரையிரங்கில் நேற்றிரவு 5 பேர் அண்ணாத்த படம் பார்க்க வந்தனர். அப்போது அவர்கள் மதுபோதையில் இருந்ததால் காவலாளி திரையரங்கிற்குள் செல்ல அனுமதிக்கவில்லை. இதனால் காவலாளியுடன் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் அக்கும்பல் ஆத்திரத்தில் திரையரங்கின் முகப்பில் இருந்த கண்ணாடியை அடித்து நொறுக்கிவிட்டு தப்பி சென்றது. இந்த சம்பவம் தொடர்பாக ரோகினி திரையரங்கு மேலாளர் ராமலிங்கம் கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து தப்பியோடியவர்களை தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: அதிகாலையில் 'அண்ணாத்த' அதிரடி; மும்பையில் முதல் ஷோவுக்கு குவிந்த ரசிகர்கள்