ETV Bharat / city

மீண்டும் களைகட்டுமா? - தீபாவளியை எதிர்நோக்கும் திரையரங்கு உரிமையாளர்கள்!

திரையரங்குகள் தற்போது திறக்கப்பட்டுள்ள நிலையில், ரசிகர்கள் கொஞ்சம் கொஞ்சமாக திரையரங்குகளை நோக்கிப் படையெடுக்கத் தொடங்கியுள்ளனர். தீபாவளி நெருங்கிவரும் நிலையில் அதனை திரையரங்கு உரிமையாளர்கள் எதிர்நோக்கியுள்ளனர்.

மீண்டும் களைகட்டுமா
மீண்டும் களைகட்டுமா
author img

By

Published : Oct 4, 2021, 12:23 PM IST

சென்னை: கரோனா இரண்டாம் அலை பரவலைக் கட்டுப்படுத்தும்விதமாக கடந்த ஏப்ரல் மாதம் மூடப்பட்ட திரையரங்குகள், மீண்டும் திறக்கப்பட்டு ஒரு மாதத்தைக் கடந்துள்ளது. ஓடிடி தளங்களால் வீடுகளில் முடங்கிக் கிடந்த ரசிகர்கள் மீண்டும் திரையரங்குகளை நாடிச்செல்ல தொடங்கியுள்ளனர்.

தயாரிப்புப் பணிகள் நிறைவடைந்த நிலையில் கிட்டத்தட்ட 300 புதிய திரைப்படங்களை, திரையரங்குகளில் வெளியிட தயாரிப்பு நிறுவனங்கள் தீவிரம் காட்டிவருகின்றன. திரையரங்குகள் மீண்டும் திறக்கப்பட்டாலும் கரோனா தடுப்புக் கட்டுப்பாடுகள் காரணமாக 50 விழுக்காடு இருக்கைகளில் மட்டுமே ரசிகர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

எனவே குறைந்த அளவிலான ரசிகர்கள் மட்டுமே திரையரங்கை நாடிவருவதாக திரையரங்கு உரிமையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

விரும்பிய திரைப்படங்களை விரும்பிய நேரத்தில் பார்க்கும் வசதி ஓடிடி தளங்களில் இருப்பது ஒருபுறமிருந்தாலும், திரையரங்குக்குச் சென்று ஒரு திரைப்படத்தைப் பார்த்தால்தான் ரசனை தன்மை நிறைவுறும் என்று நினைக்கும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை தமிழ் சினிமா உலகம் பூர்த்தி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

தமிழ்நாடு அரசு உத்தரவின்படி கட்டுப்பாடுகளுடன் ஆகஸ்ட் மாத இறுதியில் திரையரங்குகள் திறக்கப்பட்டு தற்போதுவரை, கிட்டத்தட்ட 15-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் திரையரங்கில் வெளியாகி உள்ளன. ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட தலைவி ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படமாக இருந்தது.

ஆனால் தலைவி விமர்சன ரீதியாக மட்டுமே வரவேற்பைப் பெற்றது. விஜய்சேதுபதி நடித்த லாபம் யோகிபாபுவின் பேய்மாமா, ஹிப்ஹாப் ஆதியின் சிவக்குமாரின் சபதம் போன்ற சில படங்கள் திரையரங்கில் வெளியானாலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கத் தவறியது.

கொண்டாட்டத்திற்குத் தயாராகும் திரையரங்குகள்

விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த செப்டம்பர் 17ஆம் தேதி வெளியான கோடியில் ஒருவன் திரைப்படம் ஓரளவு வசூலைப்பெற்றதோடு ரசிகர்களையும் திரையரங்கை நோக்கி வரவைத்தது.
நட்சத்திர நடிகர்களின் திரைப்படங்களால் மட்டுமே தற்போது, மீண்டும் ரசிகர்களை திரையரங்கை நோக்கி ஈர்க்க முடியும் எனத் திரையரங்க உரிமையாளர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் காத்துள்ளனர்.

சிவகார்த்திகேயன் - நெல்சன் கூட்டணியில் உருவாகியுள்ள டாக்டர் திரைப்படம் அக்டோபர் 9ஆம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது. ரஜினிகாந்த் நடிப்பில் சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள அண்ணாத்த படம் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 4ஆம் தேதி வெளியாக உள்ளது.

அதே நாளில் சிம்புவின் மாநாடு, அருண்விஜய்யின் வா டீல், ஆர்யா விஷால் இணைந்து நடித்துள்ள எனிமி போன்ற திரைப்படங்களும் தீபாவளிக்கு திரையரங்கில் வெளியாக உள்ளன. இந்தத் திரைப்படங்களால் மீண்டும் திரையரங்குகள் விழாக்கோலம்பூணும் எனத் திரையரங்கு உரிமையாளர்கள் மிகுந்த நம்பிக்கையில் உள்ளனர்.

இதையும் படிங்க: பத்திரப்பதிவில் போலி ஆவணத்தை ரத்துசெய்ய பதிவாளருக்கு அதிகாரம்!

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.