சென்னை: அதிமுக ஆட்சியில் சென்னை, கோவை மாநகராட்சிகளில் டெண்டர்களை தனக்கு நெருக்கமானவர்களுக்கு வழங்கியதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறையிடம் புகார் அளிக்கப்பட்டது.
இந்த வழக்கில் நடவடிக்கை எடுகவில்லை என்று உயர் நீதிமன்றத்தில் 2018ஆம் ஆண்டு வழக்குகள் தொடரப்பட்டன. அதைத்தொடர்ந்து ஆட்சி மாற்றத்திற்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகளை ரத்து செய்யக் கோரி வேலுமணி தரப்பில் இந்தாண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுக்களை அப்போதைய தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி அமர்வு விசாரித்துவந்தது. அப்போது வேலுமணி தாரப்பில், இந்த மனுவை ஒற்றை நீதிபதி அமர்வு தான் விசாரிக்க வேண்டும் எனவும், வருமான வரித்துறைக்காக ஆஜராகும் மத்திய அரசு வழக்கறிஞராக இருக்கக்கூடிய ராஜு என்பவர் ஆஜராகக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் நீதிபதிகள், வேலுமணி தாக்கல் செய்த மனுக்களை இரு நீதிபதிகள் அமர்வே விசாரிக்கலாம் என்று தெரிவித்தனர். மேலும், மத்திய அரசு வழங்கிய அனுமதி திரும்பப் பெறப்படாததால் வழக்கறிஞர் ராஜு ஆஜராகலாம் என்றும் உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை இன்று(செப்.19) தள்ளிவைத்து இருந்தனர்.
இந்நிலையில் வழக்கு இன்று(செப்.19) விசாரணைக்கு பட்டியலிடப்படாததால் பொறுப்புத் தலைமை நீதிபதி எம்.துரைசாமி, நீதிபதி சுந்தர் மோகன் அமர்வில் தமிழக அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும்படி கோரிக்கை வைத்தார். அதனை ஏற்ற நீதிபதிகள் நாளை (செப்.20) வழக்கை விசாரிப்பதாக தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு