சென்னை: நெசப்பாக்கத்தில் வசிக்கும் 13 வயது சிறுவன், தனது நண்பர்களுடன் சேர்ந்து அருகில் உள்ள மைதானத்திற்கு விளையாட சென்றார். அப்போது அங்கு தடகள பயிற்சி அளிப்பதாகக் கூறி கோபி கண்ணன்(32) என்பவர் சிறுவனுக்கு அறிமுகமாகி உள்ளார். பின்னர் கோபி கண்ணன், சிறுவன் மற்றும் அவரது நண்பர்களுக்கு தடகள பயிற்சி வழங்கும்போது பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
இது குறித்து சிறுவன் தனது தந்தையிடம் கூறியுள்ளார். உடனடியாக சிறுவனின் தந்தை எம்.ஜி.ஆர் நகர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.விசாரணையில் கோபி கண்ணன் சிறுவர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது உண்மையென தெரியவந்தது.
அதன்பேரில் போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கோபி கண்ணனை போலீசார் கைதுசெய்தனர்.மேலும், விசாரணையில் கோபி கண்ணனின் சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் என்பதும், இவர் சென்னையில் எலக்ட்ரீசியன் வேலை செய்துவருவதும் தெரியவந்தது.
இதையும் படிங்க: 'திருப்பூர் அருகே பள்ளி மாணவி உயிரிழப்பு - காவல்துறை விசாரணை'