ETV Bharat / city

ஆசிரியர் தகுதித் தேர்வு - 39 பேரின் விண்ணப்பம் நிராகரிப்பு

author img

By

Published : Oct 10, 2022, 6:28 PM IST

பாலிடெக்னிக் தேர்வில் முறைகேட்டில் ஈடுப்பட்டு ஆசிரியர் தகுதித்தேர்விற்கு விண்ணப்பித்த 4 பேரின் விண்ணப்பங்கள் உள்பட மொத்தம் 39 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வு
ஆசிரியர் தகுதித் தேர்வு

சென்னை: ஆசிரியர் தகுதித்தேர்விற்கு விண்ணப்பித்தவர்களில் தகுதியானவர்கள் தவிர, விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதற்கான காரணத்தை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. அதில், பாலிடெக்னிக் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டு ஆசிரியர் தகுதித்தேர்விற்கு விண்ணப்பித்த 4 பேரின் விண்ணப்பங்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் புகைப்படம், கையெழுத்து சரியாக இல்லாத 12 பேரின் விண்ணப்பமும், தேர்வர்களின் பெயர்களை சரியாக பூர்த்திச் செய்யாத 23 பேர் என 39 பேரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வு 2022 கம்ப்யூட்டர் மூலம் 14ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது.

இதற்கான ஹால்டிக்கெட் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்களுக்கு மாவட்டங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கான ஹால்டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. தேர்விற்கு முன்னதாக 3 நாள்கள் முன்னர் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்ட ஹால்டிக்கெட் 11ஆம் தேதி முதல் வழங்கப்பட உள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1 எழுதுவதற்காக 2 லட்சத்து 30 ஆயிரத்து 278 பேரும், தாள் 2 எழுதுவதற்கு 4 லட்சத்து 1 ஆயிரத்து 885 பேரும் என மொத்தமாக 6 லட்சத்து 32 ஆயிரத்து 764 பேர் விண்ணப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: அறநிலையத்துறையில் பல்வேறு காலிப்பணியிடங்கள்...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.