ETV Bharat / city

அதிமுகவினர் பணம் பட்டுவாடா செய்வதை தடுக்க முயன்ற பெண்ணுக்கு கொலை மிரட்டல் - Chennai Crime news

சென்னை: ஓட்டுக்கு பணம் கொடுத்த அதிமுகவினரை எதிர்த்து கேள்வி எழுப்பிய பெண்ணுக்கு கொலை மிரட்டல் வருவதாக அவர் காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.

பணம் பட்டுவாடா செய்த அதிமுகவினர்
பணம் பட்டுவாடா செய்த அதிமுகவினர்
author img

By

Published : Mar 20, 2021, 9:47 AM IST

சென்னை, அரும்பாக்கம் ராதாகிருஷ்ணன் நகரில் நேற்று (மார்ச். 19) காலை அதிமுக வட்டச்செயலாளர் தனசேகரன், அம்மா பேரவை தலைவர் சதாசிவம் உள்பட ஐந்து பேர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அதிமுகவுக்கு வாக்கு அளிக்குமாறு கேட்டு கொண்ட அவர்கள், வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்தனர்.

அப்போது அதே பகுதியைச் சேரந்த விசாலாட்சி (42) என்பவர் அதிமுகவினரிடம் வாக்குக்கு பணம் கொடுப்பது சட்டபடி குற்றம், எனவே பணம் கொடுப்பதை நிறுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த அதிமுகவினர் விசாலாட்சியை கட்டையால் தாக்க முயன்றதுடன் அவரை கொலைசெய்து விடுவதாக மிரட்டல் விடுத்துச் சென்றனர்.

இதனால் பயந்துபோன விசாலாட்சி, இது குறித்து அரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் அண்ணா நகர், அதிமுக வேட்பாளர் கோகுல இந்திரா தூண்டுதலின் பேரில் தனக்கு கொலை மிரட்டல் விடுத்த அதிமுகவினர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.