ETV Bharat / city

வருமானத்தை பெருக்க கேசினோ சூதாட்ட விடுதிகள் - புதுவையில் எதிர்ப்பு! - கேசினோ சூதாட்ட விடுதி

புதுச்சேரி: கேசினோ சூதாட்ட விடுதி கொண்டுவர எதிர்ப்பு தெரிவித்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

protest
protest
author img

By

Published : Jan 10, 2020, 5:06 PM IST

புதுச்சேரி அரசு சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையிலும், வருமானத்தை பெருக்கவும், கோவா மாநிலத்தில் உள்ளது போல் கேசினோ சூதாட்ட விடுதிகளை அனுமதிக்க உள்ளதாக அறிவித்தது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இன்று புதுச்சேரி தலைமை தபால் நிலையம் முன்பு பெரியார் திராவிடர் கழகத்தினர் கேசினோவைக் கொண்டுவரும் புதுவை அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

புதுச்சேரியின் அடையாளத்தை சீர்குலைக்கும் வகையில், சூதாட்ட விடுதி கொண்டுவரும் முயற்சியை புதுச்சேரி அரசு கைவிட வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் வலியுறுத்தினர். இதில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக சட்டமன்ற உறுப்பினர் வையாபுரி மணிகண்டன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பின்னர், இதுகுறித்து பெரியார் திராவிடர் கழகத்தின் புதுவை மாநிலத் தலைவர் லோகு. அய்யப்பன் செய்தியாளர்களிடம் பேசியபோது, ”அரசு, வருமானத்தை பெருக்குவதற்காக பன்னாட்டு சூதாட்ட விடுதிகள் மூலம் புதுச்சேரியின் அடையாளத்தை சீர்குலைக்கும் வகையில் இத்திட்டத்தை கொண்டுவர முயற்சிக்கிறது. இதை புதுச்சேரி அரசு கைவிட வேண்டும் “ என்றார்.

’கேசினோ - புதுச்சேரியின் அடையாளத்தை சீர்குலைக்கும் முயற்சி’

இதையும் படிங்க: கிரண்பேடிக்கு எதிரான வழக்கு - விசாரணைக்கு ஏற்றது உயர் நீதிமன்றம்!

Intro:புதுச்சேரியில் கேசினோ சூதாட்ட விடுதி கொண்டுவர எதிர்ப்பு தெரிவித்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்

Body:புதுச்சேரி அரசு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் புதுச்சேரியில் வருமானத்தை பெருக்க கோவா மாநிலத்தில் உள்ளது போல் கசினோ சூதாட்ட விடுதிகளை புதுச்சேரியில் அனுமதிக்க உள்ள நிலையில் இதற்கு பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் இந்த நிலையில் இன்று புதுச்சேரி தலைமை தபால் நிலையம் முன்பு பெரியார் திராவிடர் கழகத்தினர் அதன் தலைவர் லோகு அய்யப்பன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள் புதுச்சேரி அடையாளத்தை சீர்குலைக்கும் வகையில் சூதாட்ட விடுதி கொண்டுவரும் முயற்சியை புதுச்சேரி அரசு கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் வலியுறுத்தினர் இதில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் வையாபுரி மணிகண்டன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் பின்பு பெரியார் திராவிட கழகத்தின் தலைவர் லோகு அய்யப்பன் செய்தியாளருக்கு பேட்டி அளித்த அப்போது பேசிய அவர்,
புதுச்சேரி அரசு தங்களது வருமானத்தை பெருக்க சர்வதேச மாபியா என்று சொல்லக்கூடிய பன்னாட்டு சூதாட்ட விடுதிகள் மூலம் புதுச்சேரி அடையாளத்தை சீர்குலைக்கும் வகையில் இந்த சூதாட்டம்கிளப் திட்டத்தை கொண்டுவர முயற்சிக்கிறது இத்திட்டத்தை புதுச்சேரி அரசு கைவிட வேண்டும் என்றும் இன்று நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியதாக அவர் தெரிவித்தார்

Conclusion:புதுச்சேரியில் கேசினோ சூதாட்ட விடுதி கொண்டுவர எதிர்ப்பு தெரிவித்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.