அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இந்தியாவின் ஜனநாயகம் உள்ளிட்டவை பாதுகாக்கப்பட வேண்டும் என்கிற அடிப்படையில் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ராகுல் பிரதமராக வர வேண்டும்.
திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து எங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்தோம். எங்களின் முழு ஆதரவையும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு அளிப்போம் என உறுதியளித்துள்ளோம்.
பேரறிவாளன் விடுதலை உள்ளிட்ட 5 கோரிக்கைகளை அவரிடம் முன் வைத்தோம். அவரும் நிச்சயம் நிறைவேற்றுவதாகக் கூறினார். எனவே 40 தொகுதியிலும் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும்” எனத் தெரிவித்தார்.
மேலும், இரட்டை இலையில் போட்டியிட்டு வெற்றி பெற்றது என்பது அப்போதைய அரசியல் வியூகம் என்றும், கொள்கை அடிப்படையில் சில மாற்றங்கள் ஏற்பட நேரும் என்றும் கூறியுள்ளார்.