ETV Bharat / city

தமிழ்நாட்டில் 10 ஆயிரம் வழக்குகளுக்குத் தீர்வு - உயர் நீதிமன்றம் தகவல்! - 10 ஆயிரம் வழக்குகள்

ஊரடங்கு அமலானது முதல் இதுவரை தமிழ்நாட்டில் 10 ஆயிரத்து 652 வழக்குகள் நீதிமன்றங்கள் வாயிலாக தீர்வு காணப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

Ten thousand cases resolved
Ten thousand cases resolved
author img

By

Published : May 9, 2020, 11:41 PM IST

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க, தமிழ்நாட்டில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது மூன்றாவது கட்டமாக மே 17ஆம் தேதிவரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பின்பு, மார்ச் 26ஆம் தேதி முதல் மே 7ஆம் தேதி வரை, சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 732 வழக்குகளில், 341 வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளதாகவும், மதுரை உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்யப்பட்ட 215 வழக்குகளில், 105 வழக்குகள் தீர்வு காணப்பட்டுள்ளதாகவும், சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் சி.குமரப்பன் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள கீழமை நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்ட 12 ஆயிரத்து 109 வழக்குகளில், 10 ஆயிரத்து 206 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளன. ஊரடங்கு தொடங்கிய நிலையில், சில வழக்குகள் நீதிமன்ற அறைகளில் விசாரிக்கப்பட்டாலும், ஏப்ரல் 18ஆம் தேதி முதல் அனைத்து வழக்குகளும் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக மட்டுமே விசாரிக்கப்பட்டு வருவதாகவும், அந்த அறிவிப்பில் தலைமை பதிவாளர் குறிப்பிட்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.