ETV Bharat / city

பரம்பரை சாராத அறங்காவலர்கள் தேர்வு முறை வழக்குத் தள்ளுபடி - temple related cases at high court

சோளிங்கர் லக்ஷ்மி நரசிம்மர் கோயிலின் முதல் தீர்த்தங்கர் தொடர்ந்த பரம்பரை சாராத அறங்காவலர்கள் தேர்வு முறை வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

பரம்பரை சாராத அறங்காவலர்கள் தேர்வு முறை
உயர்நீதிமன்றம்
author img

By

Published : Dec 11, 2021, 9:25 AM IST

சென்னை: சோளிங்கர் லக்ஷ்மி நரசிம்மர் கோயிலின் நகைகள் பாதுகாப்பு அறையின் இரண்டு சாவிகளில் ஒரு சாவியை வைத்திருக்கக்கூடிய முதல் தீர்த்தங்கரரான கே.கே.சி. யோகேஷ் என்பவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். அவர் குறிப்பிட்டுள்ளதாவது,

”நவம்பர் 17ஆம் தேதி அறநிலையத் துறையின் வேலூர் இணை ஆணையர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் பரம்பரை சாராத அறங்காவலர்கள் பதவிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

அறங்காவலர்கள் நியமனம் தொடர்பாக கோயிலின் சாவியை வைத்திருக்கும் தீர்த்தங்கரர் என்ற முறையில் எனது தரப்பு ஆட்சேபத்தை முறையாகக் கேட்கவில்லை. என் தரப்பு ஆட்சேபங்களைக் கேட்க வேண்டும். மேலும், இணை ஆணையரின் அறிவிப்பை ரத்துசெய்ய வேண்டும்” என மனுவில் கோரிக்கைவைத்திருந்தார்.

இந்த மனு நீதிபதி ஆர். சுரேஷ்குமார் முன் விசாரணைக்கு வந்தது. அதில் தமிழ்நாடு அரசுத் தரப்பில், மனுதாரர் பரம்பரை அறங்காவலரோ, அங்கீகரிக்கப்பட்ட நபரோ அல்ல. நகைகள் பாதுகாக்கக்கூடிய பணிக்காக மட்டுமே ஒரு சாவி வழங்கப்பட்டு, பணியில் அமர்த்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

மேலும், பரம்பரை சாராத அறங்காவலர்கள் தேர்வு முறையில் மனுதாரரின் கருத்தைக் கேட்க அவசியம் இல்லை என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது.

வழக்குத் தள்ளுபடி

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, உயர் நீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்துள்ள உத்தரவுகளின்படி ஒரு சாவியை வைத்திருப்பது நிரந்தரமானதல்ல. இந்த நடைமுறையை மாற்றுவது தொடர்பான நடவடிக்கை எடுக்க ஆணையர், இணை ஆணையருக்கு அதிகாரம் உள்ளது என உத்தரவிட்டு வழக்கைத் தள்ளுபடிசெய்தார்.

இதையும் படிங்க: காவல் சரகங்களையும் அமைக்க சிறப்பு அலுவலர்கள் மூலம் திட்டம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.