பள்ளிக்கல்வித்துறை அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு கற்பிக்கும் சிறப்பு பயிற்றுநர்கள் நடத்தும் தொடர் காத்திருப்பு போராட்டத்தின் ஐந்தாவது நாளான இன்று, அவர்கள் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பேசிய, மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுநர்கள் சங்க மாநிலத் தலைவர் சேதுராமன், “தமிழகம் முழுவதும் சிறப்பு மாணவர்களுக்கு 1,680 பயிற்றுநர்கள் பணிபுரிந்து வருகிறோம். 402 இயன்முறை மருத்துவர்கள் பராமரிப்பாளர்கள் 3,000 பேர் பணிபுரிந்து வருகிறோம்.
கடந்த 20 ஆண்டுகளாக பணியாற்றி வரும் எங்களுக்கு காலமுறை ஊதியத்தில் பணி நிரந்தரம் வழங்க வேண்டும். தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த சிறப்பு பயிற்றுநர் சுமதி என்பவருக்கு பணியின் போது ஏற்பட்ட திடீர் விபத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு இழப்பீடு வழங்க வேண்டும். கடந்த 10 ஆண்டுகளாக இந்த திட்டத்தில் பணியாற்றி இறந்த சிறப்பு பயிற்றுநர்கள் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க: மத்திய அரசின் முடிவால் உலக அளவில் இந்தியாவின் மதிப்பு சரிந்துவிடும் - இந்திய மருத்தவ சங்கத்தினர் எச்சரிக்கை!