ETV Bharat / city

உண்ணாவிரதப்போராட்டத்தில் மயங்கி விழும் ஆசிரியர்கள்

author img

By

Published : Mar 1, 2022, 5:37 PM IST

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைத்து ஆசிரியர்களையும் தேர்தல் வாக்குறுதியில் கூறியதுபோல், போர்க்கால அடிப்படையில் நியமனம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி இரண்டாவது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களில் நான்கு பேர் மயக்கமடைந்தனர். அவர்களில் இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

teachers fasting protest
ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம்

சென்னை: ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிபெற்ற ஆசிரியர்கள் நலச்சங்கத்தின் சார்பில் சென்னை பள்ளிக்கல்வித்துறை வளாகத்தில் ஐந்து அம்சக்கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப்போராட்டத்தில் நேற்று (பிப். 28) காலை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்திலிருந்து வரும் ஆசிரியர்கள் சோர்வடைந்து மயங்கி விழுந்து வருகின்றனர். அவர்கள் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து போராடும் ஆசியர்கள் சாகும் வரையில் தங்களின் போராட்டத்தை தொடர்வதாக அறிவித்துள்ளனர்.

உண்ணாவிரதப் போராட்டத்தில் மயங்கி விழுந்த ஆசிரியர்கள்

மேலும், தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு முதலமைச்சர் ஸ்டாலினை நேரடியாக சந்திக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர். இதனால் அந்தப் பகுதியில் காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

கோரிக்கைகள்

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்ற ஆசிரியர்களுக்கான மறு நியமனத்தேர்வு என்ற அரசாணை 149-ஐ நீக்கம் செய்ய வேண்டும். 2021 பேரவைத் தேர்தலில் திமுக தேர்தல் அறிக்கை 177-ஐ உடனடியாக நிறைவேற்ற வேண்டும். ஒன்பது ஆண்டுகளாக அரசுப் பள்ளிகளில் நிரப்பப்படாத ஆசிரியர் காலிப்பணியிடங்களை ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்ற ஆசிரியர்களைக் கொண்டு போர்க்கால அடிப்படையில் உடனடியாக நிரப்பிட வேண்டும்.

கோரிக்கைகள்
கோரிக்கைகள்

பின்னடைவு காலிப்பணியிடங்கள், கடந்த எட்டு ஆண்டுகளில் ஓய்வுபெற்ற ஆசிரியர்களுக்கான காலிப்பணியிடங்கள் முழுமையாக நிரப்பப்பட வேண்டும். தற்பொழுது கரோனா பெருந்தொற்று காரணமாக அரசுப்பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அதற்கான புதிய காலிப்பணியிடங்களை உருவாக்க வேண்டும்.

இட ஒதுக்கீடு முறையை சரியாகப் பின்பற்றி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். வயது, ஆசிரியர் தகுதித்தேர்வு மதிப்பெண், வேலைவாய்ப்பு பதிவு மூப்பு உள்ளிட்டவற்றைக் கருத்திற்கொண்டு ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். தற்பொழுது தேர்வு எழுதுவதற்கு வயது உச்சவரம்பு 50-லிருந்து 58-ஆக அதிகரிக்க வேண்டும். மேலும் ஓய்வு பெறும் வயதை 60லிருந்து 58 ஆக குறைக்க வேண்டும்’ எனக் கோரிக்கைகளை வலியுறுத்திப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிங்க: உக்ரைனில் இருந்து திரும்பிய 21 தமிழ்நாட்டு மாணவர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.