சென்னை: தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநிலத் தலைவரும், ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் மற்றும் செய்தித்தொடர்பாளருமான கு. தியாகராஜன் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
'விலைவாசி உயர்வுக்கு ஏற்ப உயர்த்தி வழங்கப்படும் அகவிலைப்படி உயர்வு, கடந்த ஆட்சியில் நிறுத்தி வைக்கப்பட்டது.
மேலும், பல்வேறு உரிமைகளைக் கடந்த அரசு பறித்துவிட்டுச்சென்றது. ஆட்சி மாற்றம் ஏற்படும் எனக் கருதினோம்.
நிறைவேற்றப்பட்ட கோரிக்கைகள்
அதேபோல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக ஆட்சி நடைபெறுகிறது. தேர்தல் அறிக்கையில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் கோரிக்கையை படிப்படியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றி வருகிறார்.
சட்டமன்றத்தில் முதலமைச்சர் அறிவித்தது போல், மத்திய அரசு உயர்த்தி வழங்கியதைப்போல், அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் 14 விழுக்காடு அகவிலைப்படியை உயர்த்தி வழங்கி உள்ளார். இதனால் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் ஆகியோரது குடும்பங்கள் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தி உள்ளார்.
ஒய்வூதியத்திட்டம்
இந்நிலையில் முதலமைச்சர் தேர்தல் அறிக்கையில் கூறிய பழைய ஓய்வூதியத்திட்டம் உள்ளிட்ட அனைத்துக் கோரிக்கைகளையும் நிறைவேற்றித் தருவார் என நம்புகிறோம்" எனக் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: 10,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான திருப்புதல் தேர்வு கால அட்டவணை வெளியீடு