ETV Bharat / city

சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கன மழை எச்சரிக்கை! - cuddalore weather

tamilnadu weather update on nov 12 2020
tamilnadu weather update on nov 12 2020
author img

By

Published : Nov 12, 2020, 11:56 AM IST

Updated : Nov 12, 2020, 1:54 PM IST

11:40 November 12

சென்னை: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுச்சேரி (காரைக்கால்) ஆகிய மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கை முதல் வடதமிழக கடற்பகுதி வரை நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக அடுத்து வரும் இரு தினங்களுக்கு கடலோர தமிழ்நாடு, புதுச்சேரியிலுள்ள காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களிலும், உள் தமிழ்நாடு மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும்.  

மேலும், அடுத்த 24 மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், அடுத்த 48 மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் பெய்யக்கூடும்.  

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த இரு தினங்களுக்கு அடுத்த இடைவெளிவிட்டு மிதமான மழையும் அவ்வப்போது கன மழையும் பெய்யக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழையாக (சென்டிமீட்டரில்) அண்ணா பல்கலை, மண்டபம் (ராமநாதபுரம்), மயிலாடுதுறையில் தலா 3 செ.மீ, சென்னை நுங்கம்பாக்கம், எண்ணூர் (திருவள்ளூர்) , மயிலாடுதுறை (நாகப்பட்டினம்), ஆலந்தூர், சென்னை விமான நிலையம் தலா 2 செ.மீ, வலங்கைமான், பெரம்பலூர், திருச்செந்தூரில் தலா 1 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Last Updated : Nov 12, 2020, 1:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.