ETV Bharat / city

நாகூர் கந்தூரி விழா: சுற்றுலாவிற்கு ஏற்பாடு - pichavaram

சென்னை: புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் தர்கா கந்தூரி விழாவிற்கு செல்வதற்கு வசதியாக தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் இரண்டு நாள் சுற்றுலாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

kanthuri
kanthuri
author img

By

Published : Jan 30, 2020, 1:04 PM IST

நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரில் புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் தர்கா உள்ளது. சிறந்த மதநல்லிணக்க வழிபாட்டுத் தலமாக விளங்கும் இந்த தர்காவில், நாகூர் ஆண்டவரின் மறைந்த நாள் ஆண்டுதோறும் கந்தூரி விழாவாகக் கொண்டாடப்பட்டுவருகிறது. அதன்படி, இந்தக் கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது.

விழாவின் முக்கிய நிகழ்வாகச் சந்தனக்கூடு ஊர்வலம் நடக்கவிருக்கிறது. நாகையிலிருந்து புறப்படும் சந்தனக்கூடு பிப்ரவரி 5ஆம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு, நாகூர் தர்காவை வந்தடையும். பின்னர் நாகூர் தர்காவில் பாத்தியா ஓதி, நாகூர் ஆண்டவருக்கு சந்தனம் பூசப்படும் இந்நிகழ்வில் திரளான மக்கள் கலந்துகொள்வார்கள்.

அனைத்து மதத்தினரும் வழிபடும் நாகூர் தர்கா கந்தூரி விழாவிற்கு மக்கள் செல்வதற்கு வசதியாக, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சுற்றுலா ஏற்பாடு செய்துள்ளது.

அதன்படி, சுற்றுலா பிப்ரவரி 4 ஆம் தேதி காலை 7 மணி அளவில் நாகூருக்கு புறப்பட்டு, பின்னர் 6 ஆம் தேதி காலை சென்னை வந்தடையும். இரண்டு நாள்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தச் சுற்றுலாவிற்காக, சென்னையிலுள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக தலைமை அலுவலகத்திலிருந்து, குளிர்சாதன சொகுசுப் பேருந்து இயக்கப்படுகிறது.

செல்லும் வழியில் பிச்சாவரம் சுற்றுலாத் தலத்தை காண்பதற்கும், திருக்கடையூர் ஓட்டல் தமிழ்நாடு விடுதியில் தங்குவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலதிக தகவல்களுக்கு, ’தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம், சுற்றுலா வளாகம், வாலாஜா சாலை, சென்னை-2’ என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பர்மாவில் 4ஆவது உலகத்தொழில் மாநாடு - எழுமின் அமைப்பு

Intro:நாகூர் கந்தூரி விழா சுற்றுலாBody:நாகூர் கந்தூரி விழா சுற்றுலா

சென்னை,

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தற்போது பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சுற்றுலாவை பிரபலப்படுத்தும் நோக்கத்தில் நாகூர் கந்தூரி விழா சுற்றுலாவை அறிமுகப்படுத்தியுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரில் உலக பிரசித்தி பெற்ற நாகூர் ஆண்டவர் தர்கா உள்ளது. சிறந்த மதநல்லிணக்க வழிபாட்டு தலமாக விளங்கும் இந்த தர்காவில் நாகூர் ஆண்டவரின் மறைந்த தினம் ஆண்டுதோறும் கந்தூரி விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கி உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு ஊர்வலம் நடக்கிறது. நாகையில் இருந்து இந்த சந்தனக்கூடு புறப்பட்டு பிப்ரவரி 5 ந் தேதி அதிகாலை 4.30 மணிக்கு நாகூர் தர்காவை வந்தடைகிறது. பின்னர் நாகூர் தர்காவில் பாத்தியா ஓதி நாகூர் ஆண்டவருக்கு சந்தனம் பூசப்படும் இந்நிகழ்வில் திரளான மக்கள் கலந்து கொள்கிறார்கள்.

அனைத்து மதத்தினரும் வழிபடும் நாகூர் தர்காவில் நடைபெறும் கந்தூரி விழாவிற்கு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சுற்றுலா ஏற்பாடு செய்துள்ளது. இச்சுற்றுலா பிப்ரவரி 4 ந் தேதி காலை 7 மணி அளவில் புறப்பட்டு 6 ந் தேதி அன்று காலை சென்னை வந்தடையும். இரண்டு நாட்களுக்கு ஏற்பாடு செய்துள்ள நாகூர் சுற்றுலா சென்னை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக தலைமை அலுவலகத்தில் இருந்து (திருவல்லிக்கேணி காவல் நிலையம் அருகில்) இச்சுற்றுலாவிற்கு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தால் பயன்படுத்தப்படும் குளிர்சாதன வசதியுள்ள சொகுசு பேருந்து இயக்கப்படும். செல்லும் வழியில் பிச்சாவரம் காண்பதற்கும், திருக்கடையூர் ஓட்டல் தமிழ்நாடு விடுதியில் தங்குவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தச் சுற்றுலாவிற்கு கட்டணமாக பெரியவர்களுக்கு இருவர் தங்கும் அறை ரூ.3000 ,தனி நபருக்கு 3400 கட்டணமாகவும் வசூலிக்கப்படுகிறது. இந்த சுற்றுலாவிற்கு குளிர் சாதனப் பேருந்து இயக்கப்படும். மேலும் தொடர்புக்கு, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம், சுற்றுலா வளாகம், வாலாஜா சாலை, சென்னை-2, Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.