இதுகுறித்து அவர் அனுப்பியுள்ள கடிதத்தில், ”கோவிட் 19 முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையாக மே மாதம் மூன்றாம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் சில பணிகளுக்கு விலக்கு அளிக்கலாம் என அதில் கூறப்பட்டுள்ளது. மேலும், அரசு அலுவலகங்கள் மற்றும் தன்னாட்சி நிறுவனங்கள் குறிப்பிட்ட அளவு பணியாளர்களுடன் செயல்படலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் எடிட்டர், கண்காணிப்பாளர் போன்ற நிலையிலுள்ள ஏ மற்றும் பி கிரேட் பணியாளர்கள் இருபதாம் தேதி முதல் பணிக்கு வரவேண்டும். சி மற்றும் டி பிரிவில் பணிபுரியும் பணியாளர்களின் 33 சதவீதப் பணியாளர்கள் துறைத் தலைவரின் வேண்டுகோளுக்கு ஏற்ப பணிக்கு வரவேண்டும்.
அனைத்து மண்டல அலுவலகங்களும் செயல்பட வேண்டும். உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த உத்தரவு பொருந்தாது. பணிக்கு வருபவர்கள் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். பொது இடத்தில் கிருமி நாசினி வைத்து அதனை அனைவரும் பயன்படுத்துதல் உள்ளிட்ட அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ள வேண்டும் ” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: நாட்டுப் படகுகள் உரிய கட்டுப்பாடுகளுடன் மீன்பிடிக்க அனுமதி - தமிழ்நாடு அரசு