ETV Bharat / city

தலைமைச் செயலகத்திற்கு கூடுதல் பேருந்துகள் இயக்க கோரிக்கை! - போக்குவரத்து வசதிகள்

சென்னை: புறநகர் பகுதிகள் மற்றும் அண்டை மாவட்டங்களில் இருந்து வரும் தலைமைச் செயலக பணியாளர்களுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

secretariat
secretariat
author img

By

Published : May 20, 2020, 12:32 PM IST

ஊரடங்கு காரணமாக போக்குவரத்து வசதி இல்லாத நிலையில், அத்தியாவசியப் பணியாளர்கள், 50 விழுக்காடு அரசு ஊழியர்கள், தலைமைச் செயலக ஊழியர்கள் பணிக்கு வருவதற்காக சென்னையில் 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

ஏற்கனவே, தலைமைச் செயலக ஊழியர்களுக்காக 25 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த திங்கட்கிழமை முதல் கூடுதலாக 25 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் கூடுவாஞ்சேரி, வண்டலூர், ஊரப்பாக்கம், பெருங்களத்தூர் ஆகிய புறநகர் பகுதிகள், செங்கல்பட்டு, தாம்பரம் மார்க்கத்தின் கடைசி எல்லையில் உள்ளதால், அவ்வழியாக இயக்கப்படும் பேருந்துகள் மறைமலைநகர், கூடுவாஞ்சேரி, வண்டலூர், ஊரப்பாக்கம், பெருங்களத்தூர் பகுதிகளில் நிறுத்தப்படுவதில்லை என தலைமைச் செயலக ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதனால் அப்பகுதிகளில் இருந்து தலைமைச் செயலகம் வரும் பணியாளர்கள் பேருந்து வசதியின்றி மிகுந்த சிரமப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம், வாலாஜாபாத், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், வேலூர், திருத்தணி, உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் உள்ளதால், அவர்களின் வசதிக்காக வெவ்வேறு வழித்தடங்களில் தலைமைச் செயலகத்திற்கு மேலும் 62 பேருந்துகளை இயக்க வேண்டுமென தமிழ்நாடு தலைமைச் செயலக ஊழியர்கள் சங்கம் மாநகர போக்குவரத்துக் கழகத்திடம் வலியுறுத்தியுள்ளது.

இதையும் படிங்க: துபாயிலிருந்து சென்னை திரும்பிய 23 பேருக்கு கரோனா!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.