சென்னை: கிழக்குத் திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று (பிப்ரவரி 19) தென் தமிழ்நாடு மாவட்டங்கள், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பிப்ரவரி 20 முதல் 22 வரை: தென் தமிழ்நாடு மாவட்டங்கள், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் (தென்காசி, தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி) ஓரிரு இடங்களில் லேசான, மிதமான மழை பெய்யக்கூடும்.
பிப்ரவரி 23: தென் தமிழ்நாடு கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான, மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை வானிலை நிலவரம்
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.
இதையும் படிங்க: தனது மனைவி துர்கா ஸ்டாலினுடன் ஜனநாயக கடமை ஆற்றிய முதலமைச்சர் ஸ்டாலின்!