ETV Bharat / city

'ஒரே ஆண்டிற்குள் நிதிப்பற்றாக்குறை தொகையைக் குறைத்துள்ளோம்' - நிதியமைச்சர் - தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று(மார்ச் 22) நிதிநிலை அறிக்கை மீதான பொது விவாதத்தின்போது, முன்னாள் சட்டப்பேரவை சபாநாயகர் தனபால் எழுப்பிய கேள்விகளுக்கு, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 'ஒரே ஆண்டிற்குள் நிதிப்பற்றாக்குறைத் தொகையை குறைத்துள்ளோம்' எனத் தெரிவித்தார்.

'ஒரே வருடத்திற்குள் நிதிப்பற்றாக்குறை தொகையை குறைத்துள்ளோம்' - நிதியமைச்சர்

author img

By

Published : Mar 22, 2022, 3:43 PM IST

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று(மார்ச் 22) நிதிநிலை அறிக்கை மீதான பொது விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய முன்னாள் சட்டப்பேரவை சபாநாயகர் தனபால் கூறியபோது, 'நிதிநிலை அறிக்கையில் புதிதாக வருவாயை உயர்த்த திட்டம் ஏதும் இல்லை. செலவினத்தை குறைக்கவும் திட்டங்கள் ஏதுமில்லை. சீர்திருத்தம் செய்ததாகத் தெரியவில்லை' என்றார்.

இதற்குப் பதிலளித்த நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், 'கடந்த இடைக்கால நிதிநிலை அறிக்கையின்போது நிதிப்பற்றாக்குறை, 92 ஆயிரம் கோடி ரூபாய் வரை செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டது.

'நிதிப்பற்றாக்குறை தொகையைக் குறைத்துள்ளோம்'

ஆனால், தற்போது நிதிநிலை அறிக்கையில் 82 ஆயிரம் கோடியாக குறைந்துள்ளது. சரியான திட்டமிடுதலால் கடந்த காலத்தைவிட சுமார் 10 ஆயிரம் கோடி குறைந்துள்ளது.

முன்னாள் சபாநாயகர் தனபால் அறிக்கையைப் படித்தால் அவருக்குத் தெரியும். நடப்பாண்டில் நிதிப்பற்றாக்குறை மேலும் படிப்படியாக குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த ஆறு, ஏழு நிதிநிலை அறிக்கைகளில் இதுபோல நிதிப்பற்றாக்குறை அளவு குறைந்ததில்லை. ஆனால், ஒரே ஆண்டிற்குள் நிதிப்பற்றாக்குறை தொகையைக் குறைத்துள்ளோம்' எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'விவசாயிகளுக்கு விரைவில் மும்முனை மின்சாரம்: அமைச்சர் செந்தில் பாலாஜி'

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.