ETV Bharat / city

Tamilnadu Gold loan discount:நகைக்கடன் தள்ளுபடி - அரசாணை வெளியீடு

நகைக்கடன் தள்ளுபடி செய்வது தொடர்பான விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

Tamilnadu release eligible candidate for Gold loan discount  Tamilnadu choose various qualification to discount the gold loan  தகுதிவாய்ந்த நபர்களுக்கு நகை கடன் தள்ளுபடி  தமிழக அரசின் அரசாணை வெளியாகியுள்ளது  5 பவுனுக்கு உட்பட்ட நகை கடன்
நகை கடன் தள்ளுபடி
author img

By

Published : Dec 29, 2021, 12:33 PM IST

சென்னை:Tamilnadu Gold loan discount:நகை கடன் தள்ளுபடி என்பது ஒரு குடும்பத்திற்கு 5 பவுனுக்கு உட்பட்ட நகைக்கடன்களை சில தகுதிகளின் கீழ் உண்மையான ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் தள்ளுபடி செய்யப்படும். இதனால் அரசுக்கு ஏற்படும் செலவு, பூர்வாங்க மதிப்பீடு மற்றும் ஆய்வுகளின் அடிப்படையில் 6 ஆயிரம் கோடி ஆகும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது, இதற்கு ஆகும் செலவினங்களை தமிழ்நாடு அரசு ஏற்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தகுதி வாய்ந்த நபர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்வதற்கான விரிவான வழிகாட்டு முறைகளுடன் உரிய அறிவிப்பை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அதன்படி,

1) ஏற்கனவே 2021ம் ஆண்டு பயிர் கடன் தள்ளுபடி பெற்றவர்கள் மற்றும் குடும்ப அட்டையில் இடம்பெற்று உள்ள அவர்தம் குடும்பத்தினர்.

2) நகைக்கடன் முழுமையாக செலுத்தியவர்கள்

3) 40 கிராம் மேற்பட்டு நகைக்கடன் பெற்ற குடும்பத்தினர்

4) 40 கிராம் மேற்பட்டு நகைக்கடன் பெற்ற நபர்

5) கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் நபர் மற்றும் குடும்ப உறுப்பினர்கள்

6) கூட்டுறவு சங்க நிர்வாக குழு உறுப்பினர்கள்

7) அனைத்து அரசு ஊழியர்கள் மற்றும் குடும்பத்தினர்

8) குடும்ப அட்டை எண் வழங்காதவர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள்

9) ஆதார் எண் வழங்காதவர்கள் மற்றும் தவறாக வழங்கியர்கள்

10) குடும்ப அட்டையில் எந்த பொருளும் பெறாதவர்கள்

11) ஒன்றோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட நகைக்கடன் பெற்றவர்கள்

என விதிமுறைகள் உருவாக்கி தகுதி வாய்ந்த நபர்களுக்கு மட்டுமே தள்ளுபடி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

16 லட்சம் பேர் தகுதி வாய்ந்த பயனாளிகள் என தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது 13.5 லட்சம் பேர் மட்டுமே பயன்பெறுவார்கள் என தெரிய வந்துள்ளது, இதனால் அரசுக்கு ஏற்படும் கூடுதல் செலவினம் தவிர்க்க அரசு திட்டமிட்டு உள்ளது.

இதையும் படிங்க:நீட் விலக்கு மசோதா பரிசீலனையில் உள்ளது - ஆளுநர் மாளிகை தகவல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.