ETV Bharat / city

மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு - அரசுக்கு ஆளுநர் பாராட்டு

சென்னை: உடல் மற்றும் மனரீதியான பாதிப்புகளில் இருக்கும் மாற்றுத்திறனாளிகளின் மறுவாழ்வுக்குத் தேவையான பல்வேறு நலத்திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருவதாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பாராட்டு தெரிவித்துள்ளார்.

author img

By

Published : Dec 14, 2019, 2:58 PM IST

banwarilal
banwarilal

சென்னை ’ஃப்ரீடம்’ அறக்கட்டளை சார்பில் கிண்டியில் உள்ள மருத்துவப் பல்கலைக்கழகத்தில், மறுவாழ்வு நிபுணர்களுக்கான மருத்துவ மாநாடு மற்றும் 'ரெஹாபேசிக்ஸ் - 2019' எனும் புத்தக வெளியீட்டு நிகழ்வுகளில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்றார். நிகழ்ச்சியில் உரையாற்றிய ஆளுநர் புரோகித்,

” பல்வேறு வகையான மனம், உடல் ரீதியான பாதிப்பில் இருப்பவர்களுக்கு டாக்டர் சுந்தர் எழுதியுள்ள 'ரெஹாபேசிக்ஸ் - 2019' என்னும் புத்தகம் ஒரு மருந்தாகவும், மருத்துவமாகவும் இருக்கும். மருத்துவர்களுக்கும் இது மிகச்சிறந்த பயனை அளிக்கும். இயன்முறை மருத்துவம் மற்றும் மறுவாழ்வு என்பது ஒவ்வொருவருக்கும் அவசியமான ஒன்று.

மாற்றுத்திறனாளிகளுக்குத் தேவையான அனைத்து உபகரணங்களும் ஃப்ரீடம் அறக்கட்டளையால் கொடுக்கப்படுவதுடன் மனரீதியான மறுவாழ்வும் அளிக்கப்படுவது வரவேற்கத்தக்கது.

தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளின் மறுவாழ்வுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. அதேபோல், இந்திய அரசும் அவர்களுக்கு வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீடு முறையை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.

மாற்றுத்திறனாளிகள் பல்வேறு துறைகளில் பல்வேறு சாதனைகளை படைத்து வருகின்றனர். குறிப்பாக சேலத்தைச் சேர்ந்த தங்கவேல் மாரியப்பன் ’பாரா ஒலிம்பிக்’ இல் ஏராளமான விருதுகளை பெற்று சாதித்துள்ளார் “ என்றார்.

பன்வாரிலால் புரோகித், தமிழக ஆளுநர்

இதையும் படிங்க: 'நாட்டுக்காக விளையாடியும் வருமானத்துக்கு வழியில்லை' - மாற்றுத்திறனாளி கிரிக்கெட் கேப்டன் சச்சின் சிவா வேதனை

Intro:Body:ச.சிந்தலைபெருமாள், செய்தியாளர்
சென்னை - 14.12.19

உடல் மற்றும் மனரீதியான பாதிப்புகளில் இருக்கும் ஊனமுற்றோரின் மறுவாழ்வுக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செய்து வருகிறது; ஆளுநர் புரோகித் பேச்சு..

ப்ரீடம் அறக்கட்டளை சார்பில் கிண்டி மருத்துவப் பல்கலைக்கழகத்தில் மறுவாழ்வு நிபுணர்களுக்கான மருத்துவ மாநாடு மற்றும் 'ரெகோபேசிக்ஸ் - 2019' புத்தக வெளியீடு ஆகிய நிகழ்வுகளில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்றார். நிகழ்ச்சியில் பேசிய பன்வாரிலால் புரோகித்,

பல்வேறு வகையான மனம், உடல் ரீதியான பாதிப்பில் இருப்பவர்களுக்கு டாக்டர் சுந்தர் எழுதியுள்ள ரிகோபேசிக்ஸ் என்னும் புத்தகம் ஒரு மருந்தாகவும், மருத்துவமாகவும் இருக்கும், இதற்காக எழுத்தப்பட்டிருக்கும் ரிகோபேசிக்ஸ் புத்தகம் என்பது மருத்துவர்களுக்கு மிகச்சிறந்த பயனை அளிக்கும்.. இயன்முறை மருத்துவம் மற்றும் மறுவாழ்வு என்பது ஒவ்வொருவருக்கும் அவசியமான ஒன்றாகும்..

ஊனமுற்றோர்களுக்கு தேவையான அனைத்து உபகரணங்களும் ப்ரீடம் அறக்கட்டளையால் கொடுக்கப்படுவதுடன் மன ரீதியான மறுவாழ்வும் அளிக்கப்படுவது வரவேற்கத்தக்கது..

தமிழக அரசு ஊனமுற்றோர் மறுவாழ்வுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. அதேபோல் இந்திய அரசும் பல்வேறு வகையில் ஊனமுற்றோர்களுக்கு வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீடு முறையை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.

ஊனமுற்றோர்கள் பல்வேறு சாதனைகளை படைத்து வருகின்றனர். குறிப்பாக சேலத்தை சேர்ந்த தங்கவேல் மாரியப்பன் பாராலிம்பிக்கில் ஏராளமான விருதுகளை பெற்று சாதித்துள்ளார் என்றார்..

tn_che_01_medical_rehabilitation_program_governor_speech_script_7204894Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.