கரோனா சிகிச்சைக்கு இந்திய மருந்து முறைகளைப் பயன்படுத்துவதற்கான, இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குநரின் தலைமையில் குழுவை ஒன்றை அரசு அமைத்தது.
அக்குழு தமது பரிந்துரைகளை அரசிடம் சமர்ப்பித்ததன் பேரில், மருத்துவ முறைகளை கீழ்க்கண்டவாறு மாநிலத்தில் செயல்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மனித உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்க:
ஆயுர்வேத முறை மருத்துவத்தில்,
* 15 மில்லி இந்து காந்தா கஷாயம், 60 மில்லி முன் வேகவைத்து குளிர்ந்த நீருடன், சேர்த்து ஒரு நாளைக்கு இரண்டு முறை அருந்தலாம்.
* 10 ஜி.எம்.எஸ் கூஷ்பண்டா ரசாயனம் / அகஸ்திய ரசாயணம் - மருத்துவர்கள் அறிவுறுத்தியபடி ஒரு நாளைக்கு இரண்டு முறை எடுத்துக்கொள்ளலாம்.
சித்த மருத்துவ முறையில்,
* கபசுர குடிநீர் / நிலவெம்பு குடிநீர், வயதானவர்களுக்கு 60 - 90 மில்லி வரையிலும், குழந்தைகளுக்கு 30 - 45 மில்லி அளவிலும் கொடுக்கலாம். ஒரு நாளைக்கு ஒரு முறை உணவுக்கு முன் அருந்தலாம்.
யோகா மற்றும் இயற்கை மருத்துவ முறைகளில்,
* இந்திய நெல்லிக்காய், துளசி, இஞ்சி, எலுமிச்சை மற்றும் மஞ்சள் ஆகிய சாறுகளை அருந்தலாம். வயதானவர்களுக்கு ஒரு நாளைக்கு இரண்டு முறை 250 மில்லி, குழந்தைகளுக்கு 100 மில்லி. ஒரு நாளுக்கு இருமுறை.
* தோலுரித்து நசுக்கிய இஞ்சி, துளசி, கருப்பு மிளகு, அதிமதுரம் மற்றும் மஞ்சள் ஆகியவற்றை காய்ச்சி பெரியவர்களுக்கு 50 மில்லி. குழந்தைகளுக்கு 20 மில்லி. ஒரு நாளைக்கு இரண்டு முறை.
* யோகா சிகிச்சை - வஜ்ராசனம், பாஸ்த்ரிகா பிராணயாமம், பிரம்மாரி பிராணயாமம் செய்யலாம்.
* யோகா மற்றும் இயற்கை மருத்துவரின் ஆலோசனையின் படி, சூரியக் குளியல், ஹைட்ரோ தெரபி மற்றும் நறுமண சிகிச்சை மேற்கொள்ளலாம்.
யுனானி மருத்துவ முறைகளில்,
* பெஹிதானா, உன்னாப், சபிஸ்தான் - காபி தண்ணீர் பரிந்துரைக்கப்படுகிறது.
ஹோமியோபதி மருத்துவ முறையில்,
* ஆர்சனிகம் ஆல்பம் 30 சி. தொடர்ந்து மூன்று நாட்களுக்கு வெறும் வயிற்றில் ஒரு நாளைக்கு ஒரு முறை எடித்துக் கொள்ளலாம்.
* மருத்துவர்கள் அறிவுறுத்தலின் பேரில், பிரையோனியா ஆல்பா, ருஸ் டாக்ஸிகோடென்ட்ரான், பெல்லடோனா கெல்சீமியம் யூபடோரியம், பெர்போலியேட்டம் மருந்துகளைப் பயன்படுத்தலாம்.
சிகிச்சை மற்றும் மருத்துவமனை கவனிப்பிலிருந்து வெளிவந்த பிறகு எடுத்துக்கொள்ள பரிந்துரைக்கப்படுபவை:
ஆயுர்வேத மருத்துவத்தில்,
* தசமூலா கத்துத்ராயம் காஷயம், இந்து காந்தம் கஷாயம், வியாகிரதி கஷாயம், மூன்று மருந்துகளைத் தவிர, மருத்துவர் அறிவுறுத்தலின்படி ரசாயன சிக்கிட்சா எடுத்துக் கொள்ளலாம்.
சித்த மருத்துவத்தில்,
* அமுக்கரா சூரணம் மாத்திரை - உணவுக்குப் பிறகு ஒரு நாளைக்கு இரண்டு முறை அல்லது மருத்துவர் சொல்படி 2 மாத்திரைகள்.
* நெல்லிக்காய் லெகியம் - 5 முதல் 10 கிராம். உணவுக்குப் பிறகு ஒரு நாளைக்கு இரண்டு முறை.
கரோனா தொற்று பாதித்த நோயாளிகளுக்கு:
சிகிச்சையுடன் யோகா மற்றும் இயற்கை மருத்துவ முறையில்,
* இந்திய நெல்லிக்காய், துளசி, இஞ்சி, எலுமிச்சை மற்றும் மஞ்சள் ஆகிய சாறுகளை அருந்தலாம். வயதானவர்களுக்கு ஒரு நாளைக்கு இரண்டு முறை 250 மில்லி, குழந்தைகளுக்கு 100 மில்லி. ஒரு நாளுக்கு இருமுறை.
* தோலுரித்து நசுக்கிய இஞ்சி, துளசி, கருப்பு மிளகு, அதிமதுரம் மற்றும் மஞ்சள் ஆகியவற்றை காய்ச்சி பெரியவர்களுக்கு 50 மில்லி. குழந்தைகளுக்கு 20 மில்லி. ஒரு நாளைக்கு இரண்டு முறை.
* யோகா சிகிச்சை - வஜ்ராசனம், பாஸ்த்ரிகா பிராணயாமம், பிரம்மாரி பிராணயாமம் செய்யலாம்.
* யோகா மற்றும் இயற்கை மருத்துவரின் ஆலோசனையின் படி, சூரியக் குளியல், ஹைட்ரோ தெரபி மற்றும் நறுமண சிகிச்சை மேற்கொள்ளலாம்.
சித்த மருத்துவத்தில்,
* லேசான கரோனா அறிகுறியற்ற நோயாளிகளுக்கு மட்டும், அலோபதி சிகிச்சையுடன், கபசுர குடிநீர் / நிலவெம்பு குடிநீர் - 60 முதல் 90 மில்லி. பெரியவர்களுக்கு ஒரு நாளைக்கு இரண்டு முறை மற்றும் குழந்தைகளுக்கு மருத்துவர் அறிவுரையின்பேரில் ஒரு மாதத்திற்கு 30 - 45 மில்லி கொடுக்கலாம். இவ்வாறு அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மிளகுதான் தற்போது முறையான மருந்து - ஆயுர்வேத மருத்துவர் பெடி ரமாதேவி