ETV Bharat / city

விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல் குறித்த இணையவழி பயிற்சி - அரசு அழைப்பு!

சென்னை: தொழில் முனைவோருக்கான விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல் குறித்து இணைய வழியில் பயிற்சியளிக்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

assembly
assembly
author img

By

Published : Jun 15, 2020, 4:31 PM IST

கிண்டி சிட்கோ தொழிற்பேட்டையில் இயங்கி வரும் தமிழ்நாடு அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், தொழில் முனைவோருக்கான ஒரு நாள் பயிற்சியை அறிவித்துள்ளது. அதன்படி, “விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல்’ குறித்த ஒருநாள் பயிற்சி, இணைய வலைதளத்தின் மூலம், வரும் 19.06.2020 அன்று காலை 10.00 மணி முதல் 1.30 மணி வரை நடைபெற உள்ளது. இதில் தொழில் செய்துவரும் தொழில் முனைவோர் கலந்து கொண்டு பயன் பெற கேட்டுக்கொள்ளப்படுகிறது.

முன் பதிவு அவசியமான இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர், அலுவலக வேலை நாள்களில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை, ’8668102600, 9444557654’ என்ற எண்களில் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம். தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் இணையதளமான ‘www.editn.in’ இல் இதற்கான மேலதிக தகவல்களை பெறலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கோட்டாட்சியருக்கு விதித்த அபராதத்தைத் திரும்பப் பெற்றது உயர் நீதிமன்றம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.