ETV Bharat / city

தமிழ்நாட்டில் கரோனா சிகிச்சையில் 620 பேர்!

author img

By

Published : Mar 20, 2022, 9:44 PM IST

தமிழ்நாட்டில் 620 பேர் கரோனா சிகிச்சைப் பெற்று வருகின்றனர் எனவும், 21 மாவட்டங்களில் புதிய பாதிப்பு இல்லை எனவும் தமிழ்நாடு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில்  கரோனா சிகிச்சையில் 620 பேர்!
தமிழ்நாட்டில் கரோனா சிகிச்சையில் 620 பேர்!

சென்னை: தமிழ்நாட்டில் 21 மாவட்டங்களில் புதிதாக யாருக்கும் கரோனா வைரஸ் தொற்றுப் பாதிப்பு இல்லை எனவும், மலேசியாவிலிருந்து வந்த ஒருவர் உட்பட 56 பேருக்கு கரோனா புதிதாக 24 மணி நேரத்தில் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது எனவும் பொதுச் சுகாதாரத்துறை இயக்குநரகம் அறிவித்துள்ளது.

பொதுச் சுகாதாரத் துறை இயக்குநரகம் மார்ச் 20ஆம் தேதி வெளியிட்டுள்ள புள்ளி விவரத் தகவலில், 'தமிழ்நாட்டில் மேலும் புதிதாக 35 ஆயிரத்து 465 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதனால் தமிழ்நாட்டில் 55 நபர்களுக்கும் மலேசியாவிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்த ஒருவருக்கும் என 56 நபர்களுக்குப் புதிதாக கரோனா வைரஸ் தொற்றுப் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை 6 கோடியே 40 லட்சத்து 90 ஆயிரத்து 485 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

கரோனா சிகிச்சையில் 620 பேர்

இதனால் 34 லட்சத்து 52 ஆயிரத்து 390 நபர்கள் கரோனா வைரஸ் தொற்றுப் பாதிப்பிற்கு உள்ளாகி இருந்தனர் என்பது கண்டறியப்பட்டது. இவர்களில் தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 620 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மேலும் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நோயாளிகளில் குணமடைந்த 106 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவரின் எண்ணிக்கை 34 லட்சத்து 13 ஆயிரத்து 745 என உயர்ந்துள்ளது.

மேலும் கரோனா வைரஸ் தொற்றுப் பாதிக்கப்பட்ட கடந்த 4 நாட்களாக ஒருவரும் இறக்கவில்லை. கரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் இதுவரை 38 ஆயிரத்து 25 பேர் இறந்துள்ளனர். தமிழ்நாட்டில் மேலும் புதிதாகச் சென்னையில் 22 நபர்களுக்கும் செங்கல்பட்டில் 7 நபர்களுக்கும், சேலத்தில் நான்கு நபர்களுக்கும் காஞ்சிபுரத்தில் மூன்று நபர்களுக்கும் தொற்று பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் கோயம்புத்தூர், நீலகிரி,தஞ்சாவூர், திருவள்ளூர், திருப்பூர், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் தலா இரண்டு நபர்களுக்கும், கன்னியாகுமரி, மதுரை, நாமக்கல், சிவகங்கை, திருநெல்வேலி, திருச்சி, வேலூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு நபருக்கும் புதிதாகக் கடந்த 24 மணிநேரத்தில் கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 21 மாவட்டங்களில் ஒருவருக்கும் புதிதாகப் பாதிப்பு கண்டறியப்படவில்லை. மேலும் மாநிலத்தின் பரிசோதனை செய்பவர்களில் பாதிக்கப்பட்டவர்கள் விகிதம் 0.2 எனப் பதிவாகி உள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:கேரளாவில் சட்டென்று சரிந்த கால்பந்து அரங்கு - 200க்கும் மேற்பட்டோர் காயம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.