சென்னை: இதுகுறித்து சென்னை விமான நிலையத்தில் கே.எஸ். அழகிரி கூறுகையில், "பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் விலையை மத்திய அரசு நாள்தோறும் உயர்த்தி வருகிறது. இதற்கு பொருளாதார திட்டமிடுதல் இல்லாததே காரணம். அண்டை நாடுகளில் பெட்ரோல், டீசல் விலை குறைவாக உள்ளது. மன்மோகன் சிங், பிரதமராக இருந்த போது, கச்சா எண்ணெய் விலை உயர்ந்து இருந்தது. ஆனாலும், பெட்ரோல் லிட்டர் 78 ரூபாய்க்கு மட்டுமே விற்பனை செய்யப்பட்டது.
இன்றைய கச்சா எண்ணெய் விலைக்கு, பிரதமர் மோடி 30 ரூபாய்க்கு பெட்ரோல் வழங்கலாம். ஆனால், 100 ரூபாய்க்கு வழங்குகிறார். பெட்ரோல், டீசல் விலை ஏற்றத்தால், அதனைச் சார்ந்துள்ள பொருள்களின் விலையும் ஏறிவருகிறது.
ஐந்து மாநில தேர்தல் முடியும் வரை பாஜக விலையை ஏற்றாமல் வைத்திருந்தது. வெற்றி பெற்றதும் விலையை ஏற்றப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சொத்து வரியைக் குறைக்கக் கோரிக்கை வைத்துள்ளோம். ஆண்டுக்கு 10 சதவீதம் உயர்த்த வலியுறுத்தி உள்ளோம்" என்றார்.
இதையும் படிங்க: பட்டினி சாவுகளை நோக்கி பயணிக்கும் இலங்கை - சபாநாயகர் எச்சரிக்கை