ETV Bharat / city

1.88 கோடி மதிப்பில் 21 புதிய அம்மா மருந்தகங்கள் - பேரவையில் அறிவிப்பு! - கூட்டுறவுத்துறை அறிவிப்புகள்

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று கூட்டுறவுத்துறை சார்பில் பல்வேறு அறிவிப்புகளை அமைச்சர் செல்லூர் ராஜூ அறிவித்துள்ளார்.

eps
eps
author img

By

Published : Mar 19, 2020, 7:27 PM IST

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று கூட்டுறவுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. அப்போது அமைச்சர் செல்லூர் ராஜூ துறை சார்பில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:

15 கூட்டுறவு நிறுவனங்களின் கட்டடங்கள் 5.10 கோடி மதிப்பீட்டில் விரிவாக்கம் செய்யப்படும்.

  • 9 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் ரூபாய் 3.69 கோடி மதிப்பீட்டில் வணிக வளாகங்களும், 3 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் ரூபாய் 2.80 கோடி மதிப்பீட்டில் திருமண மண்டபங்களும் கட்டப்படும்.
  • சென்னை நடேசன் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் இரண்டு படுக்கைகள், குளியலறையுடன் கூடிய 30 அறைகள் கொண்ட மகளிர் விடுதி, ரூபாய் 1.83 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.
  • 3 வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கங்கள் மூலம் 4 பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை நிலையங்கள் அமைக்கப்படும்.
  • சிவகங்கை மற்றும் பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலைகளில் இரண்டு சுயசேவைப் பிரிவுகள் ரூபாய் 1.40 கோடி மதிப்பீட்டில் துவக்கப்படும்.
  • திருவள்ளூர், சிவகங்கை, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கடலூர், புதுக்கோட்டை மற்றும் விழுப்புரம் ஆகிய ஏழு மண்டலங்களில் ரூபாய் 1.88 கோடி மதிப்பீட்டில் புதிதாக 21 அம்மா மருந்தகங்கள் தொடங்கப்படும்.
  • கொடைக்கானல் நுகர்வோர் கூட்டுறவு பண்டக சாலையின் காலி இடத்தில் ரூபாய் 1.06 கோடி மதிப்பீட்டில் விருந்தினர் இல்லம் கட்டப்படும்.
  • புதியதாக உருவாக்கப்பட்ட ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, தென்காசி, செங்கல்பட்டு ஆகிய 5 மாவட்டங்களில் புதிய மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலைகள் தொடங்கப்படும்.
  • தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையத்திற்கு ரூபாய் 7.12 கோடி மதிப்பீட்டில் புதிய அலுவலகம் கட்டப்படும்.

இதையும் படிங்க: துப்புரவுப் பணியாளர்கள் இனி ’தூய்மைப்பணியாளர்கள்’ - பழனிசாமி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.