சென்னை: நெடுஞ்சாலைத் துறை சார்பில், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், கோயம்புத்தூர், மதுரை, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில், 310 கோடியே 92 லட்சம் ரூபாய் செலவில், 6 ரயில்வே மேம்பாலங்கள், ஒரு ரயில்வே கீழ்ப்பாலம், ஒரு உயர்மட்டப் பாலம் மற்றும் ஒரு பல்வழிச் சாலை மேம்பாலம் ஆகிய ஒன்பது பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டன.
இந்த ஒன்பது பாலங்களை சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஏப்.6) காணொலி வாயிலாக திறந்துவைத்தார்.
“ரயில்வே கடவுகளில் கட்டப்பட்டுள்ள பாலங்களால், போக்குவரத்து நெரிசல் மற்றும் பயண நேரம் குறைவதுடன், பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் உரிய நேரத்தில் பாதுகாப்புடன் பயணம் செய்ய இயலும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு செல்லும்!