ETV Bharat / city

ஊரடங்கு உத்தரவு தளர்வுகள் குறித்து முதலமைச்சர் ஆலோசனை - தமிழ்நாடு முதலமைச்சர் மருத்துவ குழுவினருடன் ஆலோசனை

சென்னை: தமிழ்நாட்டில் மேலும் பல தளங்கள் வழங்குவது குறித்து மருத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

முதலமைச்சர் ஆலோசனை
முதலமைச்சர் ஆலோசனை
author img

By

Published : Oct 28, 2020, 8:17 PM IST

ஒவ்வொரு மாதத்தின் கடைசி வாரத்திலும், அரசு அமைத்துள்ள மருத்துவ நிபுணர் குழு உடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்துவது வழக்கம்.

அதற்கு முன்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்திய கள நிலவரங்களை கேட்டறிவார்.

கரோனா அச்சம் காரணமாக நாடு முழுவதும் நவம்பர் 30ஆம் தேதி வரை ஊரடங்ககை மத்திய அரசு நீடித்து உத்திரவிட்டுள்ளது.

மருத்துவ நிபுணர் குழுவின் எச்சரிக்கையை தொடர்ந்து தமிழ்நாட்டில் கெடுபிடி சற்று அதிகமான காரணத்தால், கரோனா நோய் பரவல் கட்டுப்பாட்டு புள்ளிவிவரங்கள் வெளிப்படுத்துகின்றன.

குறிப்பாக அண்டை மாநிலங்களில், தியேட்டர்களை திறக்க அரசுகள் முடிவு செய்துள்ள போதிலும், தமிழ்நாடு அரசு இதுவரை அந்த முடிவுக்கு வரவில்லை.

சென்னை தலைமைச் செயலகத்தில் மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் இன்று எடப்பாடி பழனிச்சாமி, பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள் திறப்பு குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

ஏற்கனவே உணவகங்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்டவற்றுக்கு பல்வேறு சலுகைகளை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தற்போது திரையரங்குகள், பள்ளிகள், கல்லூரிகள்
திறக்கப்பட வேண்டியது மட்டுமே மீதமுள்ளது.

திரையரங்குகள் திறப்பு குறித்து இன்றைய ஆலோசனைக் கூட்டத்தின்போது தியேட்டர் உரிமையாளர்களின் கோரிக்கை பற்றி முதலமைச்சர் பரிசீலிப்பார் என்று தெரிகிறது.

தீபாவளி பண்டிகை வர உள்ள நிலையில் நவம்பர் மாதம் திரையரங்குகளை திறப்பதற்கு தமிழ்நாடு அரசு அனுமதி கொடுக்குமா, இதற்கு மருத்துவ நிபுணர்கள் குழு ஒப்புக் கொள்ளுமா என்பது இன்றைய கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவில் தெரியவரும். மேலும் பள்ளிகள், கல்லூரிகள், திறப்பு குறித்தும் முடிவுகள் வெளியாக வாய்ப்பு உள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.