சட்டப்பேரவையில் இன்று மீன்வளத் துறை மீதான மானியக்கோரிக்கையின்போது பேசிய திமுகவின் திருச்செந்தூர் உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன், டி.என்.பி.எஸ்.சி. விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அமைச்சரும், அதனைக் கண்டுகொள்ளாத முதலமைச்சரும் பதவி விலக வேண்டும் என்று கூறினார்.
இதற்குப் பதிலளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “அரசுப் பணியாளர் தேர்வாணைய முறைகேடு விவகாரம் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், தவறுகள் கண்டுபிடிக்கப்பட்டுவருகிறது. திமுக ஆட்சிக் காலத்திலிருந்த தேர்வாணையத் தலைவர் வீட்டில் நடைபெற்ற சோதனையில், முன்னாள் திமுக அமைச்சர் முறைகேட்டில் ஈடுபட்டது உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவர் தற்போது பேரவையில் உறுப்பினராகவும் உள்ளார்.
அதிமுக ஆட்சியில்தான் தவறுசெய்தவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு, அவர்களை கைதுசெய்து சிறையிலும் அடைத்துவருகிறோம்“ எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மக்களுக்கு பிரச்னை என்றால் அமைச்சரிடம் செல்லலாம், அமைச்சருக்கே பிரச்னை என்றால்? - துரைமுருகன்