தமிழ்நாட்டில் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர், எடப்பாடி பழனிசாமி முதல் அமைச்சராக ஆட்சிக்கு வந்தார்.
அவரின் ஆட்சிக் காலத்தில் தாக்கலாகும் மூன்றாவது நிதிநிலை அறிக்கை இது. இந்த பட்ஜெட்டுக்கு மற்றுமொரு சிறப்பும் உள்ளது.
இது ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்யும் 10ஆவது நிதிநிலை அறிக்கை. அந்த வகையில் மாநிலத்தில் அதிக முறை நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த நிதியமைச்சர் என்ற பெருமையையும் அவர் பெறுகிறார்.
பட்ஜெட் சுருக்கம்:
ஓ. பன்னீர் செல்வம் இன்று தாக்கல் செய்த நிதி நிலை அறிக்கையில் தமிழ்நாட்டின் விவசாயம், கல்வி, உறைவிடம் மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட திட்டங்களுக்கு அதிக முன்னுரிமை கொடுக்கப்பட்டிருந்தது.
மாநிலத்தின் பொருளாதார பற்றாக்குறையை பொறுத்தமட்டில், தற்போது ரூ.55,058 கோடியாக உள்ளது. இது அடுத்த ஆண்டு ரூ.59,346 கோடியாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வரி வசூல் சரிவு:
இந்தாண்டு ஜிஎஸ்டி வருவாய் ஏழாயிரம் கோடியாக குறைந்துள்ளது. இது மிகவும் குறைவான வரி வசூலாகும். அடுத்த ஆண்டு ஜிஎஸ்டி 7.2 விழுக்காடாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வருமானமும் 10.5 விழுக்காடாக வளர்ச்சிப் பெறும்.
ஆக மாநிலத்தின் வருமானம் 2020-21ஆம் ஆண்டில் ரூ.2,19,325 கோடியாக இருக்கும். செலவினங்கள் ரூ.2,40,992 கோடியாக இருக்கும். பொருளாதார பற்றாக்குறை ரூ.21,671 கோடியாகும். அந்த வகையில் கடந்த நிதியாண்டில் மாநிலத்தின் வளர்ச்சி 8.1 விழுக்காடாக இருந்துள்ளது.
துறைவாரியாக கடந்த மற்றும் நடப்பாண்டிற்கான பட்ஜெட் நிதி ஒப்பீடு
துறைகள் | 2019-20 (ரூபாய் கோடிகளில்) | 2020-21 (ரூபாய் கோடிகளில்) |
வேளாண்துறை | 15,247 | 11,894 |
மீன்வளத்துறை | 927.85 | 1290 |
பள்ளிக் கல்வித் துறை | 28,757.62 | 34,181.73 |
காவல் துறை | 7,749 | 8876.57 |
ஊரக வளர்ச்சித் துறை | 6,435 | 23,161 |
உயர்கல்வித் துறை | 4,584.21 | 5052 |
மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை | 15,863 | 12,563.83 |
எரிசக்தித்துறை | 18,560.77 | 20,115 |
போக்குவரத்துத் துறை | 1,297.83 | 2176 |
தமிழ் வளர்ச்சித்துறை | 54.76 | 74 |
சிறைத்துறை | 319.92 | 392 |
உணவு மற்றும் நுகர்வோர் துறை | 6,000 | 6,500 |
நகராட்சி நிர்வாகத் துறை | 18,700.64 | 18,540 |
வீட்டு வசதி துறை | 2,662.16 | 3,700 |
பேரிடர் மேலாண்மைத் துறை | 825 | 1,360 |
சட்டத்துறை | 1,265.64 | 1,403 |
கைத்தறி மற்றும் ஜவுளித்துறை | 1,170.56 | 1,224 |
முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டம் | 959.21 | 1,033 |
தகவல் தொழில்நுட்பத்துறை | 140 | 153 |
தொழிற்துறை | 2,747.96 | 2,500 |
தொழிலாளர் நலத்துறை | 148.83 | 200 |
நெடுஞ்சாலைத்துறை | 13,605.19 | 15,840 |
குடிமராமத்து திட்டம் | 300 | 300 |
பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை | 290.71 | 302.98 |
சுகாதாரத்துறை | 12,563.83 | 15,863 |