சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று(மே 05) பல பன்னாட்டு நிறுவனங்கள் திருவள்ளூர் மாவட்டத்தில் தொழில் தொடங்க முன்வந்துள்ளன என தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் கேள்வி-பதில் நேரத்தில், உறுப்பினர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, 'திருவள்ளூர் மாவட்டம் தொழிற்துறையில் வேகமாக வளர்ந்து வருகிறது. பாதுகாப்புத்தொழில் வழித்தடமாகவும் திருவள்ளூர் மாவட்டம் விளங்குகிறது.
2022-2023ஆம் ஆண்டிலும் புதிய தொழிற்பேட்டை அமைய உள்ளது. போக்குவரத்து, நீர், மின்சாரம், தொழிற்தேவை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டே புதிதாக சிப்காட் அமைக்கப்படுகிறது. இனி வருங்காலத்தில் அமைக்கப்படும்' என்றும் தங்கம் தென்னரசு கூறினார்.
இதையும் படிங்க: 'அரசுப்பள்ளிகளில் கட்டாய மத மாற்றத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கக்கோரிய மனு - நாளை ஒத்திவைப்பு!'