சென்னை: தமிழ்நாடு மாநிலப்பாடத்திட்டத்தில் பதினொன்றாம் வகுப்பிற்கு நடைபெற்ற தேர்வினை எழுதுவதற்கு 8 லட்சத்து 83 ஆயிரத்து 884 மாணவர்கள் பதிவு செய்திருந்தனர். தேர்வுகள் முடிந்த பின்னர் மாணவர்களின் விடைத்தாள்கள் திருத்தப்பட்டு தேர்வு முடிவுகள் வெளியிட தயாராக உள்ளது.
இந்நிலையில், இன்று (ஜூன் 27)மாணவர்கள் தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in மற்றும் www.dge.tn.gov.in என்ற இணையதளங்களில் பதிவு எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றைப் பதிவு செய்து அறிந்து கொள்ளலாம்.
மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும் அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களில் கட்டணம் இன்றியும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
மேலும் மாணவர்கள் பள்ளிகளில் அளிக்கப்பட்ட உறுதிமொழி படிவத்தில் தெரிவிக்கப்பட்ட செல்போன் எண்ணிற்கும், தனித்தேர்வர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய செல்போன் எண்ணிற்கும் எஸ்எம்எஸ் மூலம் தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்' என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:பிளஸ் 2 தேர்வு தேர்ச்சி விழுக்காட்டில் பெரம்பலூர் முதல் இடம் - மாணவர்களுக்கு வாழ்த்துகூறிய கலெக்டர்!