சென்னை: தமிழ்நாட்டில் 21 மாநகராட்சி, 138 நகராட்சி, 489 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு பிப். 19ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தல் குறித்த முழு விரவங்களை இங்கு காணலாம்.
தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சிகள்
- மொத்த மாநகராட்சிகளின் எண்ணிக்கை - 21
- மொத்த மாநகராட்சி வார்டுகளின் எண்ணிக்கை - 1,373
- மொத்த நகராட்சிகளின் எண்ணிக்கை - 138
- மொத்த நகராட்சி வார்டுகளின் எண்ணிக்கை - 3,842
- மொத்த பேரூராட்சிகளின் எண்ணிக்கை - 489
- மொத்த பேரூராட்சி வார்டுகளின் எண்ணிக்கை - 7,605
- மொத்த வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை - 30,735
- மொத்த வாக்கு எண்ணிக்கை மையங்கள் - 268
- போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை - 57,746
- போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் - 218
- வேட்புமனு தாக்கல் இன்மை - 1
- அதிகபட்ச வேட்பாளர்கள் போட்டியிட்ட வார்டுகள் - சென்னை மாநகராட்சி 190, 192ஆவது வார்டு
- குறைந்தபட்ச வேட்பாளர்கள் போட்டியிட்ட வார்டுகள் - 1,714
- 16 வேட்பாளர்களுக்கு மேல் போட்டியிட்ட வார்டுகளின் - 34
- மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை - 2.83 கோடி(ஆண்கள் -1,38,72,328, பெண்கள் - 1,44,59,303, மூன்றாம் பாலினம் - 4702)
தேர்தல் மற்றும் பாதுகாப்பு பணிகள்
- வாக்குச்சாவடிப் பணியில் ஈடுபட்ட பணியாளர்களின் எண்ணிக்கை - 1.32 லட்சம்
- தேர்தல் நடத்தும் அலுவலர்கள் எண்ணிக்கை - 648
- உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் எண்ணிக்கை -1,642
- பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகள் - 5,920
- சிசிடிவி கேமரா பொருத்தப்பட்ட வாக்குச்சாவடிகள் - 25,735
- நியமனம் செய்யப்பட்ட தேர்தல் பார்வையாளர்கள் ( Election Observer ) - 41
- நியமனம் செய்யப்பட்ட வட்டார பார்வையாளர்கள் ( Block Observer )-697
- நியமனம் செய்யப்பட்ட நுண்பார்வையாளர்கள் ( Micro Observer ) -1892
- மொத்தம் பறக்கும் படைகளின் எண்ணிக்கை - 1695
- பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவலர்கள் எண்ணிக்கை - 1 லட்சம்
தேர்தல் ரத்து மற்றும் ஒத்திவைப்பு
- தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் முதல்நிலை பேரூராட்சிக்கு உட்பட்ட அனைத்து வார்டு தேர்தல் ரத்து.
- காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம் மாநகராட்சி வார்டு 36 தேர்தல் ஒத்தி வைப்பு
- மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை நகராட்சி வார்டு 19 தேர்தல் ஒத்தி வைப்பு
- விருதுநகர் மாவட்டத்தில் வத்திராயிருப்பு தேர்வுநிலை பேரூராட்சி வார்டு 2 தேர்தல் ஒத்தி வைப்பு
- ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு அத்தாணி பேரூராட்சி வார்டு 3 மற்றும் அம்மாபேட்டை பேரூராட்சி வார்டு 2 தேர்தல் ஒத்தி வைப்பு
- தஞ்சாவூர் மாவட்டத்தில் அய்யம்பேட்டை பேரூராட்சி வார்டு 9 தேர்தல் ஒத்தி வைப்பு
வாக்கு எண்ணிக்கை
- தமிழ்நாடு முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் 22.02.2022 செவ்வாய்க்கிழமை அன்று 268 மையங்களில் எண்ணப்படும்.
- சென்னையை பொறுத்தவரை 15 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு சென்னையில் உள்ள லயோலா கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட 15 இடங்களில் எண்ணப்படும்.
- தேர்வில் வெற்றி பெறுபவர்கள் 2-03-2022 அன்று பதவியேற்றுக் கொள்வார்கள்.
- மறைமுக தேர்தல் மார்ச் 4ஆம் தேதி நடைபெறும்
- மாநகராட்சிகளுக்கான மேயர் மற்றும் துணை மேயர் நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கான தலைவர் மற்றும் துணைத் தலைவர் ஆகியோரை தேர்ந்தெடுப்பதற்கான கூட்டம் மார்ச் மாதம் 4 தேதி முதல் நடைபெறும்.
இதையும் படிங்க: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: வாக்குப்பதிவு நிறைவு