ETV Bharat / city

நீட் தேர்வில் தமிழ்நாட்டில் தேர்ச்சி விகிதம் சரிவு - எம்பிபிஎஸ்

கடந்த இரண்டு ஆண்டுகளை விட இந்தாண்டு நீட் தேர்வு எழுதியவர்களின் தேர்ச்சி விகிதம் தமிழ்நாட்டில் குறைந்துள்ளன.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Sep 8, 2022, 4:59 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் இளநிலை மருத்துவப் படிப்பிற்கான நீட்தேர்வு எழுதிய மாணவர்களில் தகுதி பெற்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையிலும், தேர்வில் தகுதிப்பெற்றவர்களின் தேர்ச்சி விகிதம் கடந்த 2 ஆண்டுகளை விட சரிந்துள்ளது.

கடந்த 2020ஆம் ஆண்டு 57.44% ஆகவும், 2021ஆம் ஆண்டு 54.40% ஆகவும் இருந்த தகுதிப் பெற்றவர்களின் எண்ணிக்கை, நடப்பு கல்வியாண்டு 2022ஆம் ஆண்டு 51.30 % ஆக குறைந்துள்ளது. தேசிய தேர்வு முகமை வெளியிட்ட கடந்த 2022 ஆண்டு நீட் நுழைவு தேர்வு முடிவுகளின் படி, இந்தியாவில் இருந்து 1764571 மாணவர்கள் தேர்வெழுதிய நிலையில், 9,93,069 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர்.

நீட் தேர்வு முடிவு-தமிழ்நாட்டின் நிலை: கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் அதிகமான மாணவர்கள் நீட் தேர்வை தமிழ்நாட்டில் இருந்து எழுதியபோதும், தேர்ச்சி விகிதத்தில் தமிழ்நாடு பின் தங்கியுள்ளது. கடந்த ஆண்டில் 99,610 பேர் நீட் தேர்வை எழுதியதில் 54.40% பேர் தேர்ச்சி பெற்றனர். நடப்பு ஆண்டில் 132167 பேர் நீட் தேர்வை எழுதிய போதும், தேர்ச்சி விகிதம் 51.30% ஆக குறைந்துள்ளது.

கடந்த ஆண்டு தேர்வு முடிவுகள் விபரம்: கடந்தாண்டு தேசிய அளவில் 15,44,275 மாணவர்கள் எழுதினர். இவர்களில் 87,074 பேர் தகுதி பெற்றனர். தமிழ்நாட்டில் 1,08,318 பேர் எழுதியதில், 58,922 பேர் தகுதி பெற்றனர். அரசு பள்ளி மாணவர்கள் 8061 பேர் எழுதியதில், 1957 மாணவர்கள் தகுதி பெற்றனர். இவர்களில் 436 பேர் எம்பிபிஎஸ் மருத்துவ இடங்களிலும், 104 பேர் பிடிஎஸ் மருத்துவ இடங்களிலும் சேர்க்கப்பட்டனர்.

குறைந்த தேர்ச்சி விகிதம்: நடப்பாண்டில் ஜூலை 17ஆம் தேதி நடந்த நீட் தேர்வை நாடு தழுவிய அளவில், 18 லட்சம் மாணவர்கள் எழுதினர். இந்த ஆண்டு தமிழ்நாட்டில் இருந்து 1,32,167 பேர் நீட் தேர்வை எழுதிய நிலையில், 67,787 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 51.30% பேர் தமிழ்நாட்டில் இருந்து தேர்ச்சி கடந்த ஆண்டை விட குறைந்தது தேர்ச்சி விகிதம்.

முதல் 50 இடங்களைப் பிடித்த மாணவர்களில் இருவர் மட்டுமே தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் மருத்துவ படிப்பிற்கான தேர்ச்சி விகிதம் குறைந்துள்ள நிலையில், இதர மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் பொதுப்பிரிவில் கூடுதல் இடங்களை பெற்று தமிழ்நாட்டில் அதிக எண்ணிக்கையில் சேர்வதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: நீட் தேர்வு முடிவு... ராஜஸ்தான் மாணவி முதலிடம்... தமிழ்நாட்டின் நிலை..?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.