சென்னை: தமிழ் புத்தாண்டு மற்றும் புனித வெள்ளி பண்டிகையை முன்னிட்டு ஏப்ரல் 14 முதல் 17ஆம் தேதி வரை பெரும்பாலான நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் அரசு தரப்பில் 1,200 சிறப்பு பேருந்துகள் விடப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக நேற்று (ஏப்.13) இரவு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக கிடத்த தகவலில் பேரில் போக்குவரத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது பயணிகள் வழக்கத்தை விட 3 மடங்கு கட்டணம் வசூலிப்பதாக அமைச்சரிடம் புகார் தெரிவித்தனர். மேலும் ஆம்னி பேருந்து கட்டணத்தை வரைமுறை படுத்துமாறும் அமைச்சரிடம் கோரிக்கை வைத்தனர். இதை கேட்டுக்கொண்ட அமைச்சர் நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
பின்னர் ஆம்னி பேருந்துகளின் நிர்வாகத்தினரிடம் பயணிகளிடம் வசூலித்த கூடுதல் பணத்தை திருப்பி கொடுக்குமாறு அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் உத்தரவிட்டார்.
மேலும் ஏப்.17ஆம் தேதி வெளியூர்களில் இருந்து சென்னையை நோக்கி அதிகளவில் மக்கள் வருவார்கள் எனவும் அன்றைக்கும் தான் ஆய்வு மேற்கொள்வேன் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: அதிவேக பயணம் உயிரைப் பறிக்கும்: அதிர்ச்சியளிக்கும் சிசிடிவி காட்சி!