ETV Bharat / city

ஜி.யு.போப் சர்ச்சை.. ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு குவியும் கண்டனங்கள்.. - ஆளுநரின் சர்ச்சை பேச்சுக்கு கிளம்பிய எதிர்ப்புகள்

ஜி.யு.போப் திருக்குறளை மொழி பெயர்த்தபோது, அதிலிருந்து ஆன்மிகத்தைப் பிரித்துவிட்டார் என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி குற்றம்சாட்டி இருப்பது சர்சையை ஏற்படுத்திய நிலையில், பல்வேறு தரப்பினரும் இது குறித்து தங்கள் கண்டனங்களையும் விளக்கங்களையும் பதிவிட்டுள்ளனர். அவை குறித்து இங்கு காணலாம்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Aug 28, 2022, 10:02 PM IST

டெல்லியில் லோதி சாலை உள்ள சீனியர் செகண்டரி பள்ளியில் நிறுவப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி 26-08-2022 அன்று திறந்து வைத்தார். அப்போது பேசிய அவர், "பிரிட்டிஷாரின் கிழக்கு இந்திய கம்பெனியும், ஜி.யு.போப் போன்ற மிஷனரிக்களும் திருக்குறளின் 'பக்தி' என்ற ஆன்மாவை வேண்டுமென்றே மறைத்துள்ளனர். திருக்குறளை முதன்முதலில் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் ஜி.யு.போப். அவருடைய மொழி பெயர்ப்பே இன்றளவிலும் கொண்டாடப்படுகிறது. ஆனால் அந்த மொழிபெயர்ப்பு காலனி ஆதிக்க மனோபாவத்துடன் இந்தியாவின் ஆன்மிக ஞானத்தை சிறுமைப்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பண்டைய தமிழ் இலக்கியங்களை புறக்கணிக்கலாமா? பிரிட்டிஷ்காரர்கள், இந்தியாவின் சிறந்த ஆன்மிகத்தன்மையை சிதைக்க முயன்றனர். அவர்கள் இந்திய வரலாறு மற்றும் கலாச்சாரத்தை சிதைத்து அதனை நிறைவேற்றினர். அதனால், இளைஞர்கள் காலனி ஆதிக்க மனோபாவத்துடன் மொழிபெயர்க்கப்பட்ட பண்டைய தமிழ் இலக்கிய புத்தகங்களைப் புறக்கணிக்க வேண்டும். மாறாக அசல் புத்தகத்தின் சாராம்சத்தை உள்வாங்கிக் கொள்ள வேண்டும்.

அமைச்சர் மனோ தங்கராஜ் கண்டனம்
அமைச்சர் மனோ தங்கராஜ் கண்டனம்

ரிக் வேதத்திற்கும் திருக்குறளுக்கும் தொடர்புண்டா? திருக்குறளை இப்போது ஏதோ வாழ்வியல் நெறிகள் என்பதுபோல் மட்டும் குறைத்து மதிப்பிட்டு வைத்திருக்கின்றனர். ஆனால், அது ஒரு இதிகாசம். அதில் நித்திய ஆன்மிகத்தின் ஆன்மா இருக்கிறது. முதல் திருக்குறளில் உள்ள 'ஆதிபகவன்' என்ற வார்த்தை ரிக் வேதத்தில் இருந்து பெறப்பட்டது. அது இந்திய ஆன்மிகத்தின் மையப்புள்ளி. ஆனால், அதன் ஆன்மாவை ஜி.யு போப் வேண்டுமென்றே. தனது மொழி பெயர்ப்பில் சிதைத்துள்ளார். 'ஆதிபகவன்' என்பதை அவர் வெறும் முதன்மைக் கடவுள் என்று மட்டும் குறிப்பிட்டிருக்கிறார்" என குற்றம்சாட்டியிருகிறார். ஆளுநர் ஆர்.என்.ரவி பேசிய கடுமையான குற்றச்சாட்டுக்கள் பேசு பொருளாக மாறியுள்ளன.

திசை மாறுகிறதா? ஆளுநரின் பேச்சு: தமிழகத்தில் ஆர்.என்.ரவி ஆளுநராக பொறுப்பேற்றத்தில் இருந்து புதிய கல்வி கொள்கை, சனாதன தர்மம் மற்றும் நீட் தேர்வு உள்ளிட்ட விவகாரங்களில் கருத்துக்களை கூறியது சர்சையாக மாறி இருந்தது. ஆர்.என்.ரவி ஆளுநராக செயல்படமால் பாஜகவின் தலைவர் போல் செயல்படுகின்றார் என திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் தொடர்ந்து அவர் மீது குற்றம்சாட்டி வருகின்றனர். அந்த வகையில் ஜி.யு.போப் குறித்த ஆளுநரின் பேச்சு பல்வேறு தரப்பினரிடையே எதிர்ப்புகளை பெற்று வருகிறது.

ஆளுநரின் பேச்சுக்கு பழ.நெடுமாறன் கண்டனம்: "ஜி.யு.போப் கிறித்துவ பாதிரியார். எனவே, அவர் திருக்குறளை தவறான கண்ணோட்டத்துடன் மொழி பெயர்த்துள்ளார் என்று ஆளுநர் குற்றம் சாட்டியுள்ளார். ஆனால், அதே ஜி.யு.போப் அவர்கள் சைவத் திருமுறைகளில் ஒன்றான திருவாசகத்தைப் படித்து உள்ளம் உருகி அந்நூலையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிட்டார் என்ற உண்மையையும் ஆளுநர் உணரவில்லை. திருக்குறளுக்கு வைதீக அடையாளத்தைச் சூட்டுவதற்கே ஆர்.என்.ரவி முயற்சித்துள்ளார்.

ஜி.யு.போப் அவர்கள் முதன்முதலாக திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து, அதன் பெருமையை உலகம் அறியச் செய்தார். காந்தியடிகள் உள்பட பலரும் அம்மொழி பெயர்ப்பைப் படித்து திருக்குறளின் பெருமையை உணர்ந்து போற்றினர் என்பதையும் ஆளுநர் அறிந்திருக்கவில்லை. தமிழ் இலக்கியம், தமிழர் பண்பாடு ஆகியவற்றைக் குறித்து தனது அறியாமையை வெளிப்படுத்துவதைவிட, பேசாமல் இருப்பது நல்லது என்பதை ஆளுநர் உணர வேண்டும்" என ஆளுநருக்குக் பழ.நெடுமாறன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஜி.யு.போப் சிலை
ஜி.யு.போப் சிலை

ஆளுநரின் பேச்சு-விரக்தியின் வெளிப்பாடு: "மதத்திற்கும், சாதிக்கும் முற்றிலும் எதிரானதும், உண்மையானதுமான ஆன்மீகத்தை பற்றி திருக்குறள் விவரிக்கிறது. ஜி.யு.போப் தமிழ் இலக்கியத்திற்கு அளித்திருக்கும் பங்களிப்பு அளப்பரியது. ஆளுநர் ரவியின் பேச்சு, தான் விரும்பும் மத உணர்வை திருக்குறள் பிரதிபலிக்கவில்லை என்ற விரக்தியின் வெளிப்பாடே ஆகும். வருணாசிரமக்காரர்களின் இத்தகைய கருத்துக்கள் ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்திற்கும், தமிழ் பண்பாட்டிற்கும் எதிராக விடுக்கப்பட்டிருக்கும் சவால்" என்று திமுகவைச் சேர்ந்த அமைச்சர் மனோ தங்கராஜ், ஆளுநரின் பேச்சுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தனது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

சனாதனத்தை தோலுரித்த 'வள்ளுவர்': மதுரை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனும் ஆளுநரின் கருத்துக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார். "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்று சனாதனத்தை தோலுரித்த வள்ளுவர் பற்றியும், 40 ஆண்டுகள் தமிழ்த் தொண்டாற்றிய ஜி.யு.போப் பற்றியும் பாடம் எடுக்கும் ஆளுநரே, கடவுள் வாழ்த்தே இல்லாமல் இந்திய அரசியல் சாசனம் ஏன் உருவாக்கப்பட்டது என்பதை படித்துப்பாருங்கள். ஆன்மீகத்தின் பெயரால் வெறுப்பை விதைப்பவர்களை வள்ளுவர் மனிதனாகவே மதிப்பதில்லை என்பதை அறிந்து கொள்ளுங்கள். உளறல்களை நிறுத்துங்கள்." என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனும் ஆளுநரின் கருத்துக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து தனது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின், தொடர்ச்சியான இது போன்ற செயல்கள் தமிழகத்திற்கும் தமிழக மக்களுக்கும் எதிராக இருப்பதாக பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில், இதற்கு திமுகவின் அதிகாரபூர்வ நாளேடான முரசொலி பதிலடி கொடுக்கும் விதமாக ஒரு செய்தியை தனது பத்திரிக்கையில் இன்று (ஆக.28) வெளியிட்டுள்ளது.

ஆளுநரின் பேச்சுக்கு முரசொலி கண்டனம்: இது தொடர்பாக எழுதியுள்ள முரசொலி, “ஆரியம், ஆத்திகம், சனாதனம், வேதங்கள் குறிந்து ஆளுநர் ஆர்.என்.ரவி, என்ன மாதிரியான விளக்கங்களை இன்று அளித்துள்ளார் என்ற பேராவல் தினந்தோறும் ஏற்படுகிறது. அவர் ஆளுநர் என்ற பொறுப்பான பொறுப்பில் இருந்து பேசுவதால்தான் இதுகுறித்து விளக்கமளிக்க வேண்டி இருக்கிறது.

நேற்றைய தினம் திருக்குறளைக் கையில் எடுத்திருக்கிறார் ஆளுநர். அவரது பேச்சில் மாற்று மதத்தினர் மீதான அவரது வெறுப்புதான் வெளிப்படுகிறதே தவிர, திருக்குறள் வெளிப்படவில்லை. தமிழறிஞர்களின் மொழிபெயர்ப்பால்தான் திருக்குறளில் உள்ள ஆன்மிகம் வெளிப்பட்டது என்ற அரிய கருத்தை அவர் சொல்லி இருக்கிறார். திருக்குறளை ஜி.யு.போப்பின் ஆங்கில மொழி பெயர்ப்பில் படித்தபோது, அதிர்ச்சியாக இருந்தது.

திருவள்ளுவர் குறிப்பிட்ட தமிழர்களின் 'ஆதிபகவன்' என்கிற ஆன்மிக ஞானத்தைச் சின்னாபின்னமாக்கும் காலனித்துவ நோக்கத்துடன் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. திருக்குறளில் இருந்த ஆன்மிகத்தை முற்றிலுமாக அகற்றி மொழி பெயர்க்கப்பட்டுள்ளது . ஜி.யு.போப் குறிப்பிட்ட மதத்தின் பிரச்சாரகர் மட்டுமல்ல, பிரிட்டன் நாடாளுமன்றத்தின் திட்டங்களுக்காக அனுப்பி வைக்கப்பட்டவர். அதே சமயத்தில் தமிழ் அறிஞர்களால் மொழி பெயர்க்கப்பட்ட திருக்குறளைப் படிக்கும்போது மகிழ்ச்சியுற்றேன் என்று ஆளுநர் ரவி பேசி இருக்கிறார். திருக்குறளில் இருக்கிற ஆன்மிகத்தைச் சிதைத்துவிட்டார்கள் என்றும் பொங்கி இருக்கிறார்.

உலக பொதுமறையை உள்ளூர் புத்தகம் ஆக்கப் பார்ப்பதா? 2050 ஆண்டுகளுக்குமுன் எழுதப்பட்ட திருக்குறள் இன்று உலகின் 200-க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு உலக பொதுமறையாக உயர்ந்து நிற்கிறது. அதனை உள்ளூர்ப் புத்தகமாக, ஒரு மதநெறியாளர்க்கு மட்டும் உரியதாகச் சுருக்கப் பார்க்கும் தந்திரம்தான் அவர் உரையின் மூலமாக வெளிப்படுகிறது. உலகின் எந்த நூனும் அடைய முடியாத உயரத்தில் இருக்கிறது திருக்குறள். அதை ஞானத்தின் ஊற்று, நித்திய ஆன்மிகம், ஞானத்தின் காவியம், தர்மத்தின் கண், ஆதிபகவன், பக்தி, ரிக்வேதம், உலகத்தைப் படைத்தவன் ஆதிபகவன் என்று சொல்வதன் மூலமாக ஒரு கூட்டுக்குள் அடைக்கப் பார்க்கிறார்கள் . இவை அனைத்தும் புதிதல்ல. இப்படி அடைக்கப்பட்டுக் கிடந்த திருக்குறளை விடுவித்தவர்கள்தான் தமிழ்நாட்டுத் தமிழறிஞர் பெருமக்கள்.

  • "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்று சனாதனத்தை தோலுரித்த வள்ளுவர் பற்றியும்,

    40 ஆண்டுகள் தமிழ் தொண்டாற்றிய ஜீ யூ போப் பற்றியும் பாடம் எடுக்கும் ஆளுநரே,

    கடவுள் வாழ்த்தே இல்லாமல் இந்திய அரசியல் சாசனம் ஏன் உருவாக்கப்பட்டது என்பதை படித்துப்பாருங்கள்.1/2 pic.twitter.com/dkrzf6wuCR

    — Su Venkatesan MP (@SuVe4Madurai) August 26, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

குறளில் இடைச்செருகல்: தமிழறிஞர்களுக்கெல்லாம் பெரும் அறிஞராகப் போற்றப்படுபவர் கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார். அவர் திருக்குறள் குறித்து என்ன எழுதி இருக்கிறார் என்பதை ஆளுநர் படிக்க வேண்டும் . "கடவுள் வாழ்த்து" அதிகாரமே இடைச்செருகல் என்று சொன்னவர் வ.உ.சி. திருக்குறள் மணக்குடவர் உரையைப் பதிப்பித்தவர் வ.உ.சி. அதில் , "திருக்குறளில் நான்காவது அதிகாரமாக இருக்கிறது, அறன் வலியுறுத்தல். முதல் மூன்று அதிகாரங்கள் கடவுள் வாழ்த்து, வான்சிறப்பு, நீத்தார் பெருமை ஆகியவை ஆகும்.

இந்த மூன்று அதிகாரங்களும் வள்ளுவர் எழுதியது அல்ல, உரையாசிரியர்கள் சிலர் எழுதிச் சேர்த்தது" என்பது வ.உ.சி. அவர்களின் கருத்து. சிறப்புப் பாயிரமாக, உரையாசிரியர்கள் சிலர் எழுதியதை வள்ளுவர் எழுதியதாக பிற்காலத்தில் சேர்த்து விட்டார்கள் என்றும் மொத்தமே 130 அதிகாரங்கள்தான் திருவள்ளுவர் எழுதியதே தவிர 133 அதிகாரங்கள் அல்ல என்றும் வ.உ.சி. சொல்கிறார்.

வள்ளுவரின் வரலாற்றிலும் திரிபு: 'மெய்யுணர்தல்' அதிகாரத்தில் கடவுளுக்குக் கூறிய இலக்கணம். 'கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் கடவுளுக்குக் கூறிய இலக்கணம் ஆகிய இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்தால் இரண்டையும் எழுதியவர் ஒருவரல்ல என்பதை அறியலாம் என்றவர் வ.உ.சி.. எனவே, கடவுள் வாழ்த்து, வான்சிறப்பு, நீத்தார் பெருமை ஆகிய மூன்று அதிகாரங்களுக்கும் 'இடைப்பாயிரம்' என்று பிரித்து விட்டார். "ஆதி என்ற புலைச்சிக்கும் பகவன் என்ற அந்தணருக்கும் பிறந்தவர் வள்ளுவர் என்பது கட்டுக்கதை" என்கிறார் வ.உ.சி.. இப்படி கட்டுக்கதையை உருவாக்கியவர்கள் பிற்காலத்தில் எழுதிச் சேர்த்ததே, அது என்பது வ.உ.சியின் ஆய்வு. பொய்க்கதைதான்' என்று தமிழ்த்தென்றல் திரு.வி.க. அவர்களும் எழுதி இருக்கிறார்கள்.

நாவலர் பாரதியாரின் கூற்று: திருக்குறளைக் கையகப்படுத்த சிலர் முயற்சித்தபோது, அதனை முறியடித்தவர்கள் வ.உ.சி, நாவலர் சோமசுந்தரபாரதி போன்ற தமிழறிஞர்கள்தான். வேதத்தில் உள்ள அறநெறிதான் திருக்குறளில் இருக்கிறது என்பது போலச் சிலரால் சொல்லப்பட்டு வருகிறது. அதுவும் தவறு. வேதநெறி வேறு; குறள் நெறி வேறு. உணவும், மணமும், அறமும் விதிப்பதுதான் 'வைதிக தர்மம்' என்கிறார் நாவலர் பாரதியார்.

இவை அனைத்துக்கும் முற்றிலும் முரணானது 'குறள் நெறி' என்கிறார் அவரே. மேலும் வள்ளுவரின் தமிழ்க் குறள், பிறப்புரிமையும் சாதியுரிமையும் பேசவில்லை என்றும், ' கல்வி, மனைமாட்சி, தவம், துறவு ஆகிய நான்கு நிலைகளைக் கொண்ட வாழ்வும் எல்லா மாந்தர்க்கும் உரிமையாம் என்றும் எல்லார்க்கும் கல்வியை பொதுவுடமை ஆக்குவது என்றும் இன்பமும் அறமும் பொருளும் அனைவருக்கும் பொது என்றும் சொல்வது 'குறள்' என்கிறார்.

அணைப்பதுபோல அழிக்கும் தந்திரம் இது: 'திருக்குறள்' என்பது சமயத்திற்காகத் தோன்றிய நூலன்று என்று சொன்னவர் குன்றக்குடி அடிகளார். 'திருக்குறளைப் பிற்காலத்தவர்கள் வடமொழி நான்மறையோடு ஒத்தது என்பர். "இல்லை, இல்லவே இல்லை" என்றவர் தவத்திரு குன்றக்குடிஅடிகளார். எனவே, வேதநெறியையும், குறள்நெறியையும் ஒப்பிடுவதே தவறு. அணைத்து அழிக்கும் தந்திரம் ஆகும் இது.

தமிழ்நாட்டின் முதல் புரட்சியாளர் என்று பேராசிரியர் இலக்குவனார் அவர்களால் போற்றப்பட்ட திருவள்ளுவரை மீண்டும் புனைவுகளுக்குள் அடைக்கக் கூடாது. ஜி.யு. போப்பின் நோக்கம் என்ன என்பது இருக்கட்டும். இன்றைய ஆளுநரின் நோக்கம் என்ன?" என்று எழுதியுள்ளனர்.

ஜி.யு.போப் குறித்த சிறு அறிமுகம்: கனடாவின் பிரின்ஸ் எட்வர்ட் தீவில் 1820ஆம் ஆண்டு பிறந்தவர். தந்தை வணிகர். இவர் குழந்தையாக இருந்தபோது குடும்பம் இங்கிலாந்துக்கு குடியேறியது. ஹாக்ஸ்டன் கல்லூரியில் பயின்ற பிறகு, சமயப் பணிக்காக 1839-ல் தமிழகம் வந்தார். கப்பலில் பயணம் செய்த 8 மாதங்களிலேயே தமிழை நன்கு கற்றார்.

பின், தூத்துக்குடி அருகே உள்ள சாயர்புரத்தில் ஆரியங்காவுப் பிள்ளை, ராமானுஜக் கவிராயரிடம் தமிழ் இலக்கண, இலக்கியங்களைக் கற்றார். தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம், மலையாளம், கன்னடம் ஜெர்மன் ஆகிய மொழிகளைக் கற்றார். தஞ்சை, உதகமண்டலம், பெங்களூருவில் சமயப் பணியோடு, கல்விப் பணி, தமிழ்ப்பணியையும் மேற்கொண்டார். இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ், தெலுங்கு பேராசிரியராக 13 ஆண்டுகள் பணியாற்றினார். 1886-ல் தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றார். அதே ஆண்டில் திருக்குறளை ‘Sacred Kural’ (புனித குறள்) என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார்.

சிந்திக்க: தமிழ் மொழியின் வரலாறு, மாண்பு, செவ்வியல் தன்மைக்கு ஆதாரமாக விளங்கும் நூல்களை வேறொன்றிலிருந்து பெற்றதாகவும் கூறப்படுகின்றன. உலகின் பண்டைய நாகரீகங்களுள் ஒன்றாக திகழும் தமிழ் மொழிக்கும் அந்தநிலை ஏற்பட்டதா என்ன? அவ்வப்போது அவற்றை தமிழ் அல்லாத பிறமொழிகளுக்கு மொழி பெயர்ப்பு செய்யும்போது மூல நூலின் உண்மை பொருள் மாறாமல் சொல்லவேண்டிய கட்டாயம் அநேக நேரங்களில் அவசியம் தான்.

வெளிநாட்டில் பிறந்து தமிழ்நாட்டில் தமிழுக்காகவும் தமிழ் மொழியின் வளமையையும் ஆழப்பொருள்கள் பலகொண்ட இலக்கிய நூல்களின் திறன்களை உலகம் அறிய பாடுபட்டு தனது வாழ்நாளை தமிழ் மண்ணில் கழித்தவரை நாம் சாதாரணமாக விமர்சனத்துள்ளாக்குவது என்னவோ, எளிமையாகிவிட்டது தற்போது உள்ள சூழலின் நடுவே. அவ்வாறெனில், ஆன்மிகத்தை திசைமாற்றுவதையே தனது நோக்கமாக்கி செய்ல்பட்டார் எனில் எவ்வாறு இவருக்கு மாணிக்கவாசகரின் திருவாசகத்தை இவர் மொழிப்பெயர்ப்புகளுள் இடம் பெற செய்ததன் காரணம் என்ன என்ற கேள்வி எழுகிறது.

எது எப்படியோ, தமிழ்நாட்டு மக்கள் தங்களுக்கும் தங்களின் மொழிக்கும் பாடுபடுவது யார் என்று அறியும் காலம் இதுபோன்ற சர்ச்சைகளினால் வெளிவரக் கூடும் என்பதற்கு இதுவே ஒரு சான்றாக அமைகிறது.

இதையும் படிங்க: 'ஆளுநர் மாளிகை ஆர்.எஸ்.எஸ் மையமாக செயல்பட்டு வருகிறது' - திருமாவளவன்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.