தமிழ்நாட்டில் கடந்த சில நாள்களாகவே தீவிர மழை பெய்துவருகிறது. தலைநகர் சென்னை கனமழை காரணமாக வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. அடுத்த இரு நாள்களும் தமிழ்நாட்டில் கனமழை பெய்யும் என ரெட் அலெர்ட் கொடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
வெள்ள பாதிப்பு முன்னெச்சரிக்கையாக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு அரசு விடுமுறை அறிவித்துள்ளது. இந்நிலையில் ஆளுநர் என்.ரவி தமிழ்நாடு மக்களை எச்சரிக்கையுடன் இருக்குமாறு வேண்டியுள்ளார்.
ஆளுநர் ரவி ட்வீட்
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "இந்திய வானிலை ஆராய்ச்சி மையத்தின் கனமழை முன்னறிவிப்பை அடுத்து, தமிழக மக்கள் விழிப்புடன் இருக்கவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவும், அத்தியாவசியமற்ற நடமாட்டம், விரும்பத்தகாத சம்பவங்களைத் தவிர்க்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக முதலமைச்சர் ஸ்டாலினை தொலைப்பேசி வாயிலாக தொடர்பு கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, வெள்ளம் பாதித்த தமிழ்நாட்டிற்கு அனைத்துவிதத்திலும் உதவத் தயார் என உறுதியளித்தார்.
இதையும் படிங்க: இந்தி தெரியாது அமித் ஷா - மிசோராம் முதலமைச்சர் கடிதம்